தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவராக இருந்தவர் சின்ன கலைவாணர் விவேக் அவர்கள். 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் பல்வேறு வகையான நகைச்சுவைப் பாத்திரங்களை இவர் ஏற்று நடித்துள்ளார். தனது நகைச்சுவைகளில் சமூக சிந்தனைகளையும் கலந்து பேசக்கூடியவர். அதனால் சின்னக் கலைவாணர் என்ற பட்டத்தையும் பெற்றார்.
பல சிந்தனையான நகைச்சுவையால் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் தனக்கென தனி ஒரு இடத்தை இன்றளவும் வைத்திருப்பவர். சினிமா தாண்டியும் பல நற்காரியங்களை செய்தவர் விவேக். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் தீவிர ரசிகனான விவேக் அவரின் கொ ள்கைகளை பின்பற்றுவதோடு அதன் வழியில் நடந்தும் உள்ளார்.
கிரீன் கலாம் எனும் பெயரில் பல லட்சம் மரங்களை நட்டத்தோடு அதை பராமரித்தும் வந்துள்ளார். மேலும் திரையுலகில் நடிகராக மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையில் பல சமுதாய சீர்திருத்த பணிகளை செய்துள்ளார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இதய முடக்கம் காரணமாக காலமானார். அவரின் இந்த திடீர் மரணம் அவரது ரசிகர்களால் இன்றளவும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.
வடிவேலு, விவேக் ஆகிய இருவரும் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் வளர்ச்சி பெரிதான பின்னர் தனித்தனியாக நடித்தனர். இருவரும் தங்களுக்கு என்று துணை காமெடி நடிகர்கள் குழு ஒன்றை உருவாக்கி வைத்திருந்தனர். சில நடிகர்கள் மட்டும் இரண்டு குழுவிலும் இருப்பார்கள்.
இந்நிலையில் விவேக் குழுவில் இடம்பெற்றிருந்த நடிகர் ஒருவர் ஒரு நேர்காணலில் பேசும்போது “விவேக் சார் ரொம்ப நல்ல மனிதர். துணை நடிகர்களை மரியாதையோடு நடத்துவார். நல்ல சம்பளம் வாங்கித் தருவார். எங்களையும் நடிக்க விடுவார். ஆனால் வடிவேலு அப்படி இல்லை. எங்களுக்கு எல்லாம் சம்பளமே அவர்தான் பேசுவார். ரொம்பக் கம்மியாகதான் வாங்கிக் கொடுப்பார். ஒரு நாள் அவர் விவேக் சாருக்கு போன் போட்டு “ஏன் கண்டவனை எல்லாம் வளத்து விடுற” எனக் கேட்டுள்ளார். அதுக்கு விவேக் சார் “நான் எங்க வளத்துவிடுறேன். அவனவன் திறமையில வளருறான்” என பெருந்தன்மையாகப் பேசினார்” எனக் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ன் ஒரு பகுதியாக, வளர்ந்து வரும் இளம் நடிகரும் பாடகருமான கென் கருணாஸ் தனது குடும்பத்துடன்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஜனநாயகக் கடமையை…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.…
தபால் நிலையத்தின் 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம், முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க உதவும் ஒரு சிறந்த சேமிப்புத்…
புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் காலியாக உள்ள 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்திற்குத்…
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குழந்தைகளை வெப்பத்திலிருந்து காக்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து மருத்துவர்கள்…