நடிகர் அஜித்தின் 62 ஆவது திரைப்படம் தான் விடா முயற்சி. மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். வில்லனாக ஆரவ், ஆக்ஷன் கிங் அர்ஜுன், வில்லியாக ரெஜினா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.
இந்த படம் முழுக்க முழுக்க அஜர் பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஓடிடி உரிமையை netflix நிறுவனம் பெற்றுள்ளது. படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில் சில பல காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்விட்டது. இறுதியாக விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வந்திருக்கிறது.
குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் வரும் ஏப்ரல் பத்தாம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களின் சூட்டிங் மற்றும் படப்பிடிப்பு என அடுத்தடுத்த வேலைகளை முடித்துக் கொடுத்து விட்ட அஜித் துபாயில் நடக்கும் கார் ரேஸில் பங்கேற்பதற்காக சென்று மூன்றாவது இடத்தை பிடித்தார். இந்நிலையில் எம்புரான்’ பட டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் அஜித்குமார் குறித்து ‘விடாமுயற்சி’ இயக்குநர் மகிழ்திருமேனி நெகிழ்ச்சியாக பேசியுள்ளர்.
அதாவது ,”அவர பத்தி பேசாம என்னால போகமுடியாது, அஜித் சார் கை கொடுத்து தூக்கி விட்டதில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். உங்களுடைய அனைத்து சப்போர்ட்க்கும் நன்றி சார். நாம் முன்னேறி கொண்டே போவோம். பிப்ரவரி 6 ஆம் தேதிக்காக காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…