தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவராக இருந்தவர் சின்ன கலைவாணர் விவேக் அவர்கள். 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் பல்வேறு வகையான நகைச்சுவைப் பாத்திரங்களை இவர் ஏற்று நடித்துள்ளார். தனது நகைச்சுவைகளில் சமூக சிந்தனைகளையும் கலந்து பேசக்கூடியவர். அதனால் சின்னக் கலைவாணர் என்ற பட்டத்தையும் பெற்றார்.
பல சிந்தனையான நகைச்சுவையால் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் தனக்கென தனி ஒரு இடத்தை இன்றளவும் வைத்திருப்பவர். சினிமா தாண்டியும் பல நற்காரியங்களை செய்தவர் விவேக். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் தீவிர ரசிகனான விவேக் அவரின் கொ ள்கைகளை பின்பற்றுவதோடு அதன் வழியில் நடந்தும் உள்ளார்.
கிரீன் கலாம் எனும் பெயரில் பல லட்சம் மரங்களை நட்டத்தோடு அதை பராமரித்தும் வந்துள்ளார். மேலும் திரையுலகில் நடிகராக மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையில் பல சமுதாய சீர்திருத்த பணிகளை செய்துள்ளார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இதய முடக்கம் காரணமாக காலமானார். அவரின் இந்த திடீர் மரணம் அவரது ரசிகர்களால் இன்றளவும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.
கணவரின் இறப்புக்குப் பின்னர் அவருடைய மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்தார் விவேக்கின் மனைவி அருட்செல்வி. சமீபகாலமாக அவர் சில ஊடகங்களில் தோன்றி கணவர் குறித்துப் பலரும் அறியாத தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் தன் வீட்டில் விவேக்குக்கு தன்னை பெண் கொடுக்க தயங்கியது குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் பேசியுள்ளார்.
அதில் “அப்போதெல்லாம் சினிமாக் காரர்களுக்கு பெண் கொடுக்க தயங்குவார்கள். அதே போல எங்கள் வீட்டிலும் தயங்கினார். ஆனால் அவர் அப்போது தலைமைச் செயலகத்தில் வேலைப் பார்த்துவந்தார். அதை சொல்லி என்னிடம் அரசு வேலை உள்ளது. நீ பயப்படாதே’ என என்னைத் திருமணம் செய்துகொண்டார்” எனக் கூறியுள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் சினிமாவில் அவர் பிரபலமானப் பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…