எம்ஜிஆர் முதன் முதலில் இயக்கிய தயாரித்த திரைப்படம் நாடோடி மன்னன். இந்த திரைப்படத்திற்கு பல்வேறு தடைகள் வந்திருந்தாலும் படத்தின் பாதையில் நடிகை பானுமதி விலகினாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் படத்தை இயக்கி முடித்தார் எம்ஜிஆர். நாடோடி மன்னன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் எம்.ஜி.ஆருக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது. அதன் பிறகு பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்த எம்ஜிஆர் மீண்டும் தயாரிப்பு, இயக்கம் மற்றும் நடிப்பு என்று இறங்கி உலகம் சுற்றும் வாலிபன் என்ற திரைப்படத்தை தயாரித்தார். முதல்முறையாக வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படம் எம்ஜிஆருக்கு மட்டும் அல்லாமல் தமிழ் சினிமாவிற்கும் புதுமையாக அமைந்தது.
அதுமட்டுமல்லாமல் எம்ஜிஆர் நடிப்பில் விளம்பரம் இல்லாமல் வெளியாகி பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் தான் உலகம் சுற்றும் வாலிபன். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் லதா. இந்த படத்தை தொடர்ந்து எம்ஜிஆர் உடன் தொடர் வெற்றி படங்களில் நடித்தார். ஆனால் தனது முதல் படமான உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடிக்கும் போது எம்ஜிஆர் உடன் இணைந்து நடிக்க நடிகை லதா தயங்கி உள்ளார்.
இதனைப் பார்த்த எம்ஜிஆர் ஏன் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்க உங்களுடன் இணைந்து நடிக்க எனக்கு தயக்கமாக உள்ளது என்று லதா கூறியுள்ளார். அதற்கு எம்ஜிஆர் ஏன் என்று கேட்க நீங்கள் ஒரு முன்னணி நடிகர், சூப்பர் ஸ்டார். நான் ஒரு அறிமுக நடிகை அதுதான் தயக்கமாக உள்ளது என்று லதா கூறியுள்ளார். எல்லாம் தயாராகி படப்பிடிப்புக்கு வந்த போது இப்படி சொல்கிறாரே என்று எம்ஜிஆர் கோபப்பட்டாலும் பிறகு லதாவின் நிலைமையை புரிந்து கொண்டு அவரிடம் சென்று காதில், வேண்டுமென்றால் இந்த படத்தின் ஹீரோவை மாற்றி விடலாமா என்று கேட்டுள்ளார்.
இதனைக் கேட்ட லதா வாய்விட்டு சிரித்துள்ளார். அதன் பிறகு படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் எம்ஜிஆரின் வழிகாட்டுதலின்படி லதா அந்த திரைப்படத்தில் நடித்து முடித்தார். இந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் எம்ஜிஆர் இயக்குனராக தனது திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்த திரைப்படமாக இந்த படம் அமைந்திருந்தது.
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு…
சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…