அதிர்ச்சி… விஜய் அமைச்சரவையில் இருந்து விஸ்வநாதன் நீக்கம்?…. வெடித்தது புதிய சர்ச்சை…. சற்றுமுன் பரபரப்பு…!

By Nanthini on ஆனி 14, 2026

Spread the love

தமிழக அரசியலில் பணி உயர்வு உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படும் என தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் தொடர்ந்து உறுதி அளித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதனின் சமீபத்திய பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அரசுப் பணிகளில் “சிபாரிசு வேண்டாம் என்று நான் சொல்லவில்லை” என்று அவர் ஒரு பொது மேடையில் பேசியது, தவெக-வின் ஊழல் எதிர்ப்பு மற்றும் வெளிப்படைத்தன்மைக் கொள்கைக்கு முற்றிலும் முரணாக இருப்பதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் வெடித்துள்ளன.

யார் லஞ்சம் வாங்கினாலும் அல்லது ஊழல் புரிந்தாலும் உடனடியாக அவர்களை முதலமைச்சர் விஜய் பதவியிலிருந்து நீக்கிவிடுவார் என்று தவெகவினர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வரும் சூழலில், கூட்டணிக் கட்சியின் அமைச்சரான விஸ்வநாதன் மீது முதல்வர் விஜய் தகுந்த நடவடிக்கை எடுத்து அவரை அமைச்சரவையிலிருந்து நீக்குவாரா என்று நெட்டிசன்கள் தற்போது சமூக ஊடகங்களில் காரசாரமாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.