பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியானது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த வாரத்தோடு முடிவடைய இருக்கிறது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஆறாம் தேதி தொடங்கி இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொடங்கி தொகுத்து வழங்கி வருகிறார். மொத்தம் 24 போட்டியாளர்களோடு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது முத்துக்குமரன், சௌந்தர்யா, ரயன், பவித்ரா, விஷால் ஆகிய ஐந்து பேர் மட்டுமே இறுதி கட்டத்தை நோக்கி சென்று இருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் அளிக்கும் வாக்கு அடிப்படையில் தான் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அந்த வகையில் கடந்த சீசனில் இருந்து போட்டியாளர்கள் வெளியே பிஆர் வேலைகளை செய்ய ஆட்களை வைத்து ஓட்டு வாங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருக்கிறது. அதேபோல தற்போது நடைபெற்று வரும் எட்டாவது சீசனில் பி ஆர் வேலைகள் அதிகம் நடப்பதாக போட்டியாளர்கள் கூறி வருகிறார்கள். அதிலும் சௌந்தர்யா இந்த சீசனில் எதுவுமே செய்யாமல் வெறும் பிஆர் உதவியோடு பைனலுக்கு வந்துவிட்டதாக சுனிதா நேரடியாகவே கூறினார்.
இதை சௌந்தர்யா மறுத்தாலும் தனக்காக வேலை செய்யும் பிஆர்டி இருப்பதையும் ஒத்துக் கொண்டார். இந்த நிலையில் சௌந்தர்யாவின் பி ஆர் டீம் செய்யும் மோசடி வேலைகளையும் முன்னால் பிக் பாஸ் போட்டியாளர் சனம் செட்டி அம்பலப்படுத்தியுள்ளார். அதாவது பைனலுக்கு இன்னும் கொஞ்ச நாட்கள் மட்டுமே இருப்பதால் சௌந்தர்யாவை ஜெயிக்க வைத்துவிட வேண்டும் என்று அவருடைய காதலன் விஷ்ணு விஜய் முயன்று வருகிறார் என்று ஆதாரத்தோடு வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கும் முறை உள்ளது அதன்படி சவுந்தர்யாவிற்கு வாக்களிக்க கொடுக்கப்பட்ட மிஸ்டு கால் நம்பரை சௌந்தர்யாவினுடைய அதிகாரபூர்வ இன்ஸ்டா பக்கத்தில் இணைத்து யாரேனும் அவருடைய இன்ஸ்டால் பக்கத்திற்கு சென்றால் அதை cal என்று ஆப்ஷன் இருக்கும். அது சௌந்தர்யாவாக இருக்கும் என்று நினைத்து கால் செய்வார்கள் என்பதை கருத்தில் கொண்டு அந்த மிஸ்டு கால் நம்பரை அதில் இணைத்து வைத்திருக்கிறார்கள். அதேபோல சௌந்தர்யாவின் காதலன் விஷ்ணு விஜய் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் எனக்கு உடனே கால் பண்ணுங்க அவசரம் என்று கூறி ஒரு போன் நம்பரையும் பதிவிட்டுள்ளார். இது சௌந்தர்யாவுக்கு வாக்களிக்கும் நம்பர் ஆனால் அவருக்கு என்ன ஆனதோ என பதறி பலரும் கால் செய்து வருகிறார்கள் என்று ஆதாரத்தோடு கூறியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…