மறைந்த நடிகர் முரளியின் மகனை வைத்து படம் பண்ணும் பில்லா பட இயக்குனர்.. ஹீரோயினாக இவுங்கதான்.. வெளியான செம்ம அப்டேட்..

By Ranjith Kumar on பிப்ரவரி 10, 2024

Spread the love

காதல் மன்னன் அஜித் அவர்களை அல்டிமேட் அஜித் ஆக மாற்றி பில்லா படம் மூலம் திரைத்துறைக்கு பிரபலமான விஷ்ணுவர்தன், ஆரம்பம், யாக்கை போன்ற பல முன்னணி படங்களை இயக்கி உள்ளார், அவர் இயக்கும் படம் அனைத்தும் அவர போலவே மிகவும் ஸ்டைலிஷ் ஆகவும் புதுமையாகவும் இருக்கும். அவர் அடுத்ததாக இயக்க உள்ள படத்தின் அப்டேட் வெளியிட்டு இருக்கிறார்.

   

தமிழ் திரை உலகில் ஒரு தலை காதல்காகவே பிறந்த இதயம் முரளி அவர்களின் மகனான, பானா காத்தாடி, இமைக்கா நொடிகள் போன்ற பல படங்களில் தன் இளமையான நடிப்பு மற்றும் கவர்ச்சி ஊட்டும் தன் அழகால் பல ரசிகர் கூட்டங்களை முக்கியமாக பெண் ரசிகர் கூட்டங்களை கவர்ந்துள்ளார். அதர்வா முரளிதரன் தம்பியான ஆகாஷ் முரளிதரன் அவர்கள் தமிழ் சினிமா துறைக்கு அறிமுகமாக உள்ளாராம், அவரும் தன் அண்ணன் அதர்வ முரளி போலவே மிகவும் அட்ராக்டிவான அழகாகதான் இருக்கிறார்.

   

 

தற்போது பில்லா, ஆரம்பம் போன்ற அல்டிமேட் ஆன படங்களை கொடுத்த விஷ்ணுவர்தன் அவர்கள் இயக்கத்தில் முரளியின் இரண்டாவது மகனான ஆகாஷ் முரளி ஹீரோவாக, சங்கர் மகளான அதிதி சங்கர் அவர்கள் ஹீரோயின் ஆகவும், இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, விஜயின் மாஸ்டர் படத்தை புரொடியூஸ் செய்த XP பிலிம் இப்படத்தை தயாரிக்க உள்ளாராம்.அல்டிமேட் ஆக இயக்கும் விஷ்ணுவர்தன் அவர்களும், யங் கதாநாயகியாக வளம் வரும் அதிதி சங்கர், கியூட் பாயாக இருக்கும் ஆகாஷ் முரளி,

இசையின் நாயகன் யுவன் சங்கர் ராஜா அவர்கள் இணைவது மிகவும் புதுமையானதாக உள்ளது இவர்கள் இணைந்து கொடுக்கப் போகும் படம் மிகவும் அல்டிமேட் ஆக தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் கூட்டணியை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளார்கள். ஆகாஷ் முரளிதரன் அவர்களின் முதல் படமாக இருப்பதால் யுவன் சங்கர் ராஜா மற்றும் விஷ்ணுவர்தன் அவர்கள் இயக்கத்தில் அறிமுகம் இவர் தந்தை மற்றும் அண்ணன் போல் தனக்கென்று ஒரு இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.