முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) புதிய அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசு அமைச்சராகப் பொறுப்பேற்கும் சூழல் உருவாகியுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து விலகி விசிக எடுத்துள்ள இந்த அதிரடி முடிவை திமுக தலைமை கடுமையாக விமர்சித்துள்ளது. இதற்கு எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் மிகக் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ள விசிக, “ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் வாக்குகளை மட்டும் தங்களுக்குச் சாதகமாகப் பெற்றுக்கொண்டு, ஆட்சியில் அல்லது அதிகாரத்தில் உரிய பங்கு தர மறுக்கும் உங்களின் ‘சுமூக நீதி’ கொள்கையை நீங்களே உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள்” என திமுகவின் போலி சமூக நீதியை நேரடியாகச் சாடியுள்ளது.
மேலும், விசிகவை நோக்கி திமுகவினர் முன்வைக்கும் ‘கட்சித் தாவல்’ மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் என்ற குற்றச்சாட்டுகளுக்கும் அக்கட்சி மிகக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசியல் ஆதாயத்திற்காகத் தடம் மாறுவது குறித்துப் பேசுவதற்கு மற்ற கட்சியினருக்கு என்ன தகுதி அல்லது அருகதை இருக்கிறது என்று விசிக வினவியுள்ளது. கடந்த கால அரசியல் வரலாற்றைச் சுட்டிக்காட்டியுள்ள விசிக, “மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதற்காக, தங்களின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறான சங் பரிவாருடன் (பாஜக) கைகோர்த்து, மத்தியில் அக்கட்சியின் அமைச்சரவையில் இடம்பெற்ற சுயநலக் கூட்டணி வரலாறு யாருடையது?” என்று திமுகவின் பழைய பாஜக கூட்டணி வரலாற்றை நினைவு கூர்ந்து மிகத் தீவிரமான பதிலடி கொடுத்துள்ளது.
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…