நான்கே நாட்களில் ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூலை முறியடித்து மாஸ் காட்டிய மதகஜராஜா.. மொத்த வசூல் இத்தனை கோடியா..?

By Soundarya on தை 16, 2025

Spread the love

பொங்கலுக்கு அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகாமல் இருந்தால் தான் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர், பாலாவின் வணங்கான், ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை, விஷ்ணுவர்தன் இயக்கிய நேசிப்பாயா, விஷாலின் மதகஜராஜா உள்ளிட்ட படங்கள் இந்த படம் கடந்த 12 வருடங்களாக ரிலீஸ் செய்யப்படாமல் முடங்கி கிடந்தது. இத்தனை வருடங்கள் கழித்து ரிலீஸ் ஆவதால் இதற்கு வரவேற்பு கிடைக்குமா? என்ற தயக்கமும் ஏற்பட்டது படக்குழுவினருக்கு.

   

ஆனால் ரிசல்ட் தலைகீழாக மாறியது. இந்த வருடம் எதிர்பார்க்கப்பட்ட வணங்கான் மற்றும் கேம் சேஞ்சர் படங்கள் சொதப்பினாலும் பொங்கலுக்கு சர்ப்ரைஸ் வின்னராக மாறியுள்ளது. பல வருடங்கள் கழித்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படம் என்றால் அது இந்த படம் என்றே சொல்லலாம். அந்த குறைய தீர்க்கும் படமாக பொங்கல் விருந்தாக வந்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க படமாக மாறி உள்ளது.

   

 

வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் முதல் நாளில் 2.48 கோடியும், இரண்டாம் நாளில் 2.56 கோடியும் பொங்கல் அன்று 5.52 கோடியும், மாட்டுப் பொங்கல் என்று 6.28 கோடியும் வசூலித்து ஒட்டுமொத்தமாக 16.84 கோடி வசூலித்துள்ளது.

இதன் மூலமாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் லால் சலாம் படத்தில் லைஃப் டைம் வசூல் சாதனை இந்த படம் முறியடித்துள்ளது. ரஜினியின் லால் ஸலாம் படம் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 16.15 கோடி மட்டுமே வசூலித்திருந்தது. ஆனால் மதகஜராஜா படம் நான்கு நாட்களில் அந்த வசூல் சாதனையை முறியடித்துள்ளது.