தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் சுந்தர் சி. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு விஷாலை வைத்து மதகஜராஜா என்ற திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார். தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு அதிவேகத்தில் முடிந்தது. அதே ஆண்டு இந்த திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் வெளியாகவில்லை.
இது திரைப்படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனு சூட், அஞ்சலி மற்றும் மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மயில்சாமி, மனோபாலா மற்றும் சிட்டிபாபு என பலரும் நடித்திருந்தனர். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில் விஜய் ஆண்டனி இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் ஆர்யா கெஸ்ட் ரோலிலும், சதா ஒரு பாடலுக்கும் நடனமாடியுள்ளார். மதகஜராஜாவை சுருக்கமாக எம்ஜிஆர் என்று அழைத்து வந்தனர்.
இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் எப்போது வரும் அப்போது வரும் என்று தகவல் மட்டுமே வெளியாகிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் இந்த படத்தையே ரசிகர்கள் மறந்து போன நிலையில் தற்போது 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த படத்தின் வெளியீட்டு தேதி சாத்தியமாகியுள்ளது. அதாவது இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக இருந்த நிலையில் தற்போது விடாமுயற்சிய ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் அதனை பயன்படுத்திக் கொண்ட மதகதராஜா படக் குழு படத்தை வெளியிட உள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…