விஜய் மாதிரி நிறைய பணம் சம்பாதிச்சு, புள்ள குட்டி எல்லாம் பெத்துட்டு அப்புறம்.. விஷால் கட்சி தொடங்கியது பற்றி ஓப்பனாக பேசி அவரின் அப்பா..

By Ranjith Kumar

Updated on:

விஷால் அவர்கள் பல வருடங்கள் சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கிறார். அவர் சில காலங்களாக அரசியில் ஈடுபட முன் வந்திருக்கிறார், ஆனால் தற்போது விஜய் அவர்கள் அரசியலுக்கு வருவதை அறிக்கை மூலம் வெளியிட்டுருந்ததை போல் விஷால் அவர்களும் அதே சாயலில் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார், அது மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையாக இருந்தது,


அதுவும், ‘பாதிக்கப்பட்டத் விவசாயத் தோழர்களுக்கு உதவி செய்து வருகிறோம்… அரசியல் ஆதாயத்தைப் எதிர்பார்த்து மக்கள் பணி செய்வதில்லை’ என அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் வார்த்தைகள் விஜய்யை சீண்டும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், விஷால் அப்பா ஜி.கே ரெட்டி தன்மகன் விஷாலை பற்றி கூறியிருந்த வாரு.மக்கள் அவனை ஹீரோவாக்கியிருக்காங்க. அந்த மக்களுக்காக அவனும் அன்பா செய்றான். இதுல, பெத்தவங்க எங்களுக்கும் பெருமைதான்.என் மனைவி பெயர்ல இயங்கிட்டிருக்க ‘தேவி அறக்கட்டளை’ மூலமா ஆயிரக்கணக்கான மாணவர்களைப் படிக்க வெச்சுட்டிருக்கான். மாசத்துக்கு 30 லட்சத்திலிருந்து 40 லட்சம் ரூபாய் வரை செலவாகிட்டிருக்கு. இதனாலேயே, கடன் பிரச்சனையெல்லாம் சந்திச்சிருக்கான். ஆனா, ஏழை, எளிய மாணவர்களுக்கு செய்றதுல பின்வாங்கக்கூடாதுன்னு உறுதியா இருக்கான்.

   
vishal 6

“விஷால் ரொம்ப நேர்மையானவன். சின்ன வயசிலிருந்தே எல்லோருக்கும் ஹெல்ப் பண்ணுவான். ஏழைங்களுக்கு ஒண்ணுன்னா தன்கிட்ட இல்லாட்டியும் கடன் வாங்கியாவது செஞ்சுடுவான். அப்படியொரு, குணமான பிள்ள. சின்ன வயசுலதான் அப்படின்னா, பெரியவனாகி சினிமாவுக்கு வந்தும் சம்பாதிக்கிற பணத்தையெல்லாம் உதவியா செஞ்சிட்டிருக்கான்.நாங்களும் சப்போர்ட்டா இருக்கோம். சினிமாவுல இருந்து அரசியல் என்னும் அதிகாரத்துக்கு அவன் வந்தா, இன்னும் மக்களுக்கு நல்லது பண்ணுவான். அதனால்தான், முன்னாடி ஆர்.கே நகர் தேர்தல்ல எல்லாம் போட்டியிட்டான்.இப்போ, தன்னோட ரசிகர் மன்றங்களை இயக்கமா மாத்தியிருக்கான். அடுத்து, அரசியல்தான்னு எல்லோரும் நினைக்கலாம். அவங்க நினைக்கிறது சரிதான். கண்டிப்பா, விஷாலும் அரசியலுக்கு வருவான். சந்தேகமே வேணாம். ஜெயிச்சும் காட்டுவான். எங்களுக்கு அந்த நம்பிக்கை நிறையவே இருக்கு

அதேநேரம், அரசியல் சாதாரணமானது கிடையாது. மக்களுக்கு சேவை செய்ய நிறைய பணம் வேணும். அதுக்கு, இன்னும் சம்பாதிக்கணும். இப்போ, விஜய் எடுத்துக்கோங்க. நிறைய சம்பாதிச்சுட்டுத்தான் அரசியலுக்கு வந்திருக்கார். விஜய், அஜித், சூர்யா மாதிரி விஷாலும் நிறைய சம்பாதிக்கணும். திருமணம் பண்ணி வாழ்க்கையில் செட்டில் ஆகிட்டு அரசியலுக்கு போகணும்ங்கிறதுதான், ஒரு அப்பாவா என்னோட விருப்பம்.
அவனுக்கும் அதுதான் நல்லது. பணரீதியா அவன் முதல்ல ஸ்ட்ராங்காகணும். வெறும் சினிமா ரசிகர்களை மட்டுமே வெச்சுட்டு அரசியலுக்கு திடீர்னு வந்துடக்கூடாது. சிவாஜி, சிரஞ்சீவின்னு எத்தனையோ நடிகருங்க அரசியலுக்கு வந்து என்ன ஆனாங்கன்னு எல்லோருக்குமே தெரியும். அதனால, அவனும் சரியான திட்டமிடலோட அரசியலுக்கு வரணும். அதுதான், என் விருப்பம்.

தமிழ்நாட்ல எத்தனையோ கட்சிங்க இருக்கு. திமுகவையும் அதிமுகவையும் தாண்டி ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம். ஏன்னா, அவங்கக்கிட்டே நிறைய பணம் இருக்கு. பணம் இருந்தாதான் மக்களுக்கு நிறைய பண்ண முடியும்.
“பெத்தவங்களுக்கு அடங்கி மதிச்சு நடக்குற பிள்ள அவன். எல்லாத்தையும் எங்கக்கிட்டே ஷேர் பண்ணிக்குவான். இயக்கமா மாத்தப்போறேங்கிறதையும் ஷேர் பண்ணிக்கிட்டான். ‘முதல்ல நீ திருமணம் பண்ணி செட்டில் ஆகிடு. சினிமாவுல நிறைய சம்பாதிச்சு சேர்த்து வை. அதுலருந்து, மக்களுக்கு உதவிகள் செஞ்சுக்கிட்டே வா. நீ பண்ற உதவிங்க மக்களுக்கு தெரியணும். அவங்களே மனசுல இடம் கொடுப்பாங்க. அதுக்கப்புறம் அரசியலுக்கு வரலாம். அதனால, இப்போ உனக்கு அரசியல் வேணாம்னு’னு சொன்னேன். அவனும் கேட்டுக்கிட்டான். எங்கப் பேச்சைக் கேப்பான்னு நம்பிக்கை இருக்கு” என்கிறார் விஷாலின் தந்தை.

author avatar
Ranjith Kumar