#image_title
நடிகை ஜூலி என்ற விசாலாட்சி ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியல் மூலம் பிரபலமானவர். இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் டான்ஸராகவும் விசாலாட்சி கலக்குவார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சிகளில் விசாலாட்சி பங்கேற்றுள்ளார்.
சத்யா, சித்திரம் பேசுதடி உள்ளிட்ட சீயல்கள் விசாலாட்சியில் சின்னத்திரை சினிமா வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரை சீரியல்களில் விசாலாட்சி நடித்து வருகிறார். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் ஆகிவிட்டது. ஆனால் குழந்தை இல்லாததால் விசாலாட்சியும் அவரது கணவரும் வேதனையில் இருந்தனர்.
ஏற்கனவே அவருக்கு இரண்டு முறை அபார்ஷன் ஆனது குறிப்பிடத்தக்கது. பத்து ஆண்டுகள் கழித்து கர்ப்பமான விசாலாட்சிக்கு சமீபத்தில் தான் வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. அவரது வளைகாப்பு நிகழ்ச்சியில் சீரியல் நடிகர்களும் நடிகைகளும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் விசாலாட்சிக்கு நேற்று இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை. இது பற்றி விசாலாட்சி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு தங்களுக்காக வேண்டிக் கொண்டவர்களுக்கும், ஆசிர்வாதம் செய்தவர்களுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.அதனைப் பார்த்த ரசிகர்கள் விசாலாட்சிக்கும் அவரது கணவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி படேல் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்த சில மணி நேரங்களிலேயே 35 வயதான ஷிவாங்கி…
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில், காவல்துறை சீருடையைத் தவறாகப் பயன்படுத்திய இளைஞர் ஒருவரின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சஹாதேய்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்த ஒரு படகு விபத்தில், உயிரிழந்த தாய் மற்றும் மகனின் உடல்கள் ஒன்றையொருவர் இறுக்கமாகக்…
சமூக வலைதளங்களில் 'புனீத் சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் பிரகாஷ் குமார், சாக்கடை நீரில் குளித்து, அதில் உணவை நனைத்து…
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹென்ரிச் கிளாசென், தனது குடும்பத்துடன் இருந்தபோது அனுமதியின்றி வீடியோ எடுத்த நபரைக் கடுமையாக…
வாஷிங்டனில் நடைபெற்ற 'ஒயிட் ஹவுஸ் நிருபர்கள் சங்க விருந்து' (White House Correspondents' Dinner) நிகழ்ச்சிக்குச் சற்று முன்னதாக, ரகசிய…