‘விருமன்’ பட நடிகை சாண்டி மாஸ்டர் உடன் இணைந்து போட்ட குத்தாட்டம்…. மாஸ்டரையே மிஞ்சிருவார் போல இருக்கே….

By Begam on புரட்டாதி 9, 2022

Spread the love

சமீபத்தில் திரையில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம்’ விருமன்’ . இப்படத்தை இயக்குனர் முத்தையா இயக்கியிருந்தார். இதில் நடிகர் கார்த்திக், இயக்குனர் சங்கர் அவர்களின் மகளான அதிதி சங்கர் இணைந்து நடித்திருந்தனர். படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

   

இதில் அவர் ஒரு பாடல் ஒன்றையும் பாடியுள்ளார். ‘மதுர வீர அழகுல’ இந்த பாட்டு ஒலிக்காத செல்போன்களே இல்லை என்ற அளவிற்கு இந்த பாட்டு அனைவருக்கும் பிடித்து போனது. நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் இப்படத்தின் மூலம் அறிமுகமான அதிதி நடனத்திலும் கைத்தேர்ந்தவர்.

   

இப்படத்தின் மூலம் இவர் அதிகமான ரசிகர்களை கவர்ந்து விட்டார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் அவர் தொடர்ந்து கமிட்டாகி வருகிறார். அதில் ஒன்று சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘மாவீரன்’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

 

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்களையும், வீடியோக்களையும்  அவ்வப்போது பகிர்ந்து வருவார். அந்த வகையில் சாண்டி மாஸ்டர் உடன் இணைந்து அவர் போட்ட குத்தாட்டம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Aditi Shankar (@aditishankarofficial)