ஹிட்மேனை ஓரங்கட்டிய விராட்!… CSK-வை வச்சு செய்த ‘கிங்’ கோலி… டி20 கிரிக்கெட்டில் புதிய சாம்ராஜ்யம்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

Spread the love

2026 ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிரான விறுவிறுப்பான ஆட்டத்தில், விராட் கோலி 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில், ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற சாதனையை அவர் தன்வசப்படுத்தினார்.

தற்போது சி.எஸ்.கே. அணிக்கு எதிராக மட்டும் கோலி 1,188 ரன்களை விளாசியுள்ளார். இதற்கு முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 1,161 ரன்கள் எடுத்திருந்த ரோகித் சர்மாவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். மேலும், இந்தப் பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 1,159 ரன்கள் எடுத்துள்ள விராட் கோலி மூன்றாம் இடத்திலும் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் ஆர்.சி.பி. அணி ஆதிக்கம் செலுத்தியது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 20 ஓவர்களில் 250 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்தது. கடினமான இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி, 19.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இதன் மூலம் 43 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி. அணி அபார வெற்றி பெற்றது.

Muthu Mani

Recent Posts

அடங்காத ஆத்திரம்… தீராத ரத்தவெறி.. துப்பாக்கியுடன் தேடிச்சென்று… மனைவியின் உயிரைப் பறித்துவிட்டுத் தானும் பிணமான கணவன்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த மிதுன் (27) மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த போக்கன் குமாரி (25) ஆகிய…

16 minutes ago

“தெருவில் காட்டிய வித்தை” ஒரே ஒரு வீடியோ… சிறுவனின் வாழ்க்கையை மாற்றப் போகும் ஆனந்த் மகிந்திராவின் ஒற்றை ட்வீட்..!!

உத்தரகாண்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நைனிதால் வீதிகளில், ஒரு சிறுவன் பொதுமக்களுக்கு முன்னால் அசாத்தியமான மேஜிக் வித்தைகளைக் காட்டும் வீடியோ…

27 minutes ago

“அந்தமான் கடலுக்கு அடியில் கிடைத்த ‘புதையல்’!.. இந்தியாவுக்கு அடித்த பிரம்மாண்ட அதிர்ஷ்டம்.. அலறும் உலக நாடுகள்.. வெளியான மாஸ் வீடியோ”..!!

இந்திய அரசின் பொதுத்துறை ‘மகாரத்னா’ நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட், அந்தமான் கடற்பகுதியின் ஆழமற்ற ஆய்வு வளையத்தில் புதிதாக இயற்கை…

42 minutes ago

FLASH: திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளர் பதவியில் இருந்து விலகல்.. உதயநிதிக்கு பலத்த அடி..!!

திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் தனிப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில், அக்கட்சியின் தலைமை…

54 minutes ago

“சுற்றி இருக்கும் 10 பேர் கொண்ட கும்பல் உருவாக்கிய மாயை” – திமுகவை அதிரடியாக வெளுத்து வாங்கிய தவெக அமைச்சர்…!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கவர்ச்சியால் ஆட்சி அமைத்ததாகப் பேசிய திமுக தலைவரின் விமர்சனத்திற்கு, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா…

1 மணத்தியாலம் ago