“டேய் சும்மா இருங்கடா” மைதானத்திலேயே விழுந்து விழுந்து சிரித்த விராட் கோலி… புவனேஷ்வர், குருணாலுடன் செய்த லூட்டி – இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

By Swetha on வைகாசி 8, 2026

Spread the love

மைதானத்தில் எப்போதும் ஆக்ரோஷமாக காணப்படும் விராட் கோலி, போட்டிக்கு முன்னதாக லக்னோ அணி வீரர்களுடன் மிகவும் சகஜமாக உரையாடிக்கொண்டிருந்தார். குறிப்பாக, தனது முன்னாள் இந்திய அணி சகாக்களான புவனேஷ்வர் குமார் மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோருடன் அவர் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். களத்தில் எதிரெதிர் அணிகளாக இருந்தாலும், வீரர்களுக்கு இடையே இருக்கும் ஆழமான நட்பை இந்தச் சந்திப்பு பிரதிபலித்தது.

அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது ஏதோ ஒரு நகைச்சுவையான விஷயத்தை யாரோ பகிர, அதைக் கேட்ட கோலி வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கினார். சிரிப்பை அடக்க முடியாமல் ஒரு கட்டத்தில் அவர் அப்படியே மைதானத்தின் தரையில் சரிந்து விழுந்தார். ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர், எவ்வித பந்தாவும் இன்றி சக வீரர்களுடன் இப்படி விழுந்து விழுந்து சிரிக்கும் காட்சி அங்கிருந்தவர்களையும், கேமராக்களையும் கவர்ந்தது.

   

   

 இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலானது. “கிங் கோலி”யை இவ்வளவு மகிழ்ச்சியாகப் பார்ப்பது அரிது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். போட்டியின் தீவிர அழுத்தங்களுக்கு மத்தியிலும் வீரர்கள் தங்களுக்குள் இருக்கும் நட்பை கொண்டாடுவதும், மன அழுத்தமின்றி விளையாட்டை அணுகுவதும் ஆரோக்கியமான விஷயம் என கிரிக்கெட் ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.