“RCB செய்த அந்தச் செயல் உண்மையா?”… இது சுத்தப் பொய்… கோலியைப் பற்றி பரவும் ‘ஷாக்’ நியூஸ்… ஆர்சிபி ரகசியத்தை அம்பலப்படுத்திய விராட்…!!!

By Rajeshwari on பங்குனி 22, 2026

Spread the love

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, இந்தியா மற்றும் லண்டன் இடையே பயணம் செய்ய தமக்கு பிரத்யேக சார்ட்டர் விமான வசதியை அணி நிர்வாகம் வழங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலை வதந்தி என மறுத்துள்ளார்.

இதனால் ஐபிஎல் 2026 தொடர் நடைபெற்று வரும் வேளையில், கோலி தனது குடும்பத்தினரைச் சந்திக்க அடிக்கடி லண்டன் சென்று வருவதாகவும், இதற்காக ஆர்சிபி நிர்வாகம் தனி விமான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

   

இந்தத் தகவல்களை முற்றிலுமாக நிராகரித்த கோலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்தச் செய்தியைப் பகிர்ந்து, நகைச்சுவையான எமோஜிகளைப் பதிவிட்டு இது ஒரு அடிப்படை ஆதாரமற்ற செய்தி என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

   

மேலும் விராட் கோலி இதுபோன்ற வதந்திகளுக்குத் தனது பாணியிலேயே பதிலடி கொடுத்துள்ளார். தேவையற்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அந்தச் செய்தியைப் பார்த்து சிரிப்பது போன்ற எமோஜிகளைப் பதிவிட்டதன் மூலம், இதில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

தற்போது ஐபிஎல் போட்டிகளில் முழு கவனத்தையும் செலுத்தி வரும் கோலி, மைதானத்திற்கு வெளியேயும் தம்மைக் குறித்துப் பரப்பப்படும் தவறான தகவல்களைக் கையாளுவதில் மிகுந்த நிதானத்தைக் கடைபிடித்துள்ளார். இந்த விளக்கம் ஆர்சிபி ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் நிலவி வந்த குழப்பத்திற்குத் தீர்வாக அமைந்துள்ளது.