விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் மதுரை முத்து. இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு சின்னத்திரையில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து மிகவும் பாப்புலரான ஒருவராக இருந்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து தன்னுடைய பட்டிமன்ற பேச்சால் அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார். பல நேரங்களில் இவர் பேச்சும் பேசுங்கள் டைமிங் காமெடியாக இருப்பதால் ரசிகர்கள் தங்களுடைய மனக்கவலையை மறந்து வாய்விட்டு சிரித்து வருகிறார்கள்.

காமெடி நடிகரான மதுரை முத்து லேகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2016ல் கார் விபத்து ஒன்றில் லேகா உயிரிழந்தார். இவரது மனைவியின் மறைவுக்கு பின்னர் தனது 32 வது வயதில் தனது மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் மதுரை முத்து. இவர் தற்பொழுது நாட்டாமை கெட்டப்பில் ரெடி ஆகும் வீடியோ ஒன்றை தனது இணையதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ இந்த வைரல் வீடியோ…
View this post on Instagram
