தமிழகத்தின் பல மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களையும் கண்காணிக்க மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்பவர்கள் முக கவசம் அணிய வேண்டும் என்ற நேற்று அரசு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
