லிஃப்ட் தகராறில் வெறிச்செயல்: பெண்ணைக் காலால் உதைத்து, வாலியால் முகத்தில் அடித்த கொடூரன்! நெஞ்சை பதறவைக்கும் பகீர் வீடியோ..!!

By Swetha on வைகாசி 16, 2026

Spread the love

புனேவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மின் தூக்கி (Lift) அருகே, ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம், எதிர்பாராத விதமாக கடுமையான வன்முறையாக மாறியுள்ளது. இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி (CCTV) காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மின் தூக்கிக்கு வெளியே இருவருக்கும் இடையே ஏதோ ஒரு விஷயத்திற்காக வாக்குவாதம் தொடங்குகிறது. கோபமடைந்த அந்தப் பெண் திடீரென அந்த நபரைத் தொடர்ச்சியாகக் கன்னத்தில் அறைந்தும், காலால் எட்டி உதைத்தும் தாக்கத் தொடங்குகிறார். அங்கிருந்த மற்றொரு நபர் அவர்களைத் தடுக்க முயன்றும் அந்தப் பெண்ணின் ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

   

பெண்ணின் தாக்குதலால் ஆத்திரமடைந்த அந்த நபர், அங்கிருந்து நகர்ந்து சென்று உடனடியாக ஒரு பிளாஸ்டிக் வாளியை (Bucket) எடுத்துக்கொண்டு ஓடி வருகிறார். யாரும் எதிர்பாராத விதமாக, அந்த வாளியைக் கொண்டு அந்தப் பெண்ணின் தலையிலும் உடலிலும் மிகக் கொடூரமாகத் தாக்குகிறார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.