Categories: சினிமா

பிரதீப் பண்ணது ஆபாசம், நிக்சன் பண்ணது ஜோக்கா.. மாயா – பூர்ணிமாவை வச்சி செஞ்ச வினுஷா.. வைரலாகும் வீடியோ..

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது 100 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இதுவரை வெளியேறிய சில போட்டியாளர்கள் தற்பொழுது வீட்டுக்குள் வந்துள்ளனர். அப்படி மீண்டும் வீட்டுக்குள் வந்த வினுஷா அனைவரிடமும் சந்தோஷமாக சிரித்து பேசி வருகிறார். ஆனாலும் அவர் நிக்சன் தன்னை body shaming செய்ததை தட்டிக் கேட்க சரியான தருணமாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

#image_title

நிக்சன், வினுஷாவை பார்த்து இந்நிகழ்ச்சியில் ‘ஒரு பெண்ணுக்கு எது, எது எப்படி இருக்க வேண்டுமோ? அப்படி எதுவுமே இல்லாத ஒரு பெண்ணாக வினுஷா இருக்கிறார்’ என கூறியது சோசியல் மீடியாவில் மிகப்பெரும் பேசுபொருளாக மாறியது. ஆனால் இதுகுறித்து கமலஹாசன் நிக்சனிடன் எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை. இந்நிலையில் வைல்ட் கார்டு என்ட்ரியில் வந்த அர்ச்சனா முதன்முதலாக கேள்வி எழுப்பினார்.

இதனால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவும் கிடைத்தது. இதைப்புரிந்த கொண்ட அவர் அடிக்கடி இந்த விவகாரத்தை பற்றி பேசிக்கொண்டே வந்தார். இதனால் கடுப்பான வினுஷா தற்போழுது பிக் பாஸ் வீட்டில் முதலில் அர்ச்சனாவிடம், ‘உங்களுக்கு ஒரு பிரச்சனை வரும் போது என் பெயரை யூஸ் பண்ணி விளையாடி இருக்கீங்க?’ என்று கேள்வி எழுப்பி அவரை வறுத்தெடுத்தார்.

இதை தொடர்ந்து பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் அமர்ந்திருக்க பூர்ணிமாவிடம் ‘நிக்சன்  என்னை பத்தி பேசுனது  ஜஸ்ட் ஜோக்ன்னு நீங்க சொல்லி இருக்கீங்க? ஏன்? ‘ என்று கேள்வி எழுப்ப அதற்கு பூர்ணிமா, ‘கண்டிப்பா அவன் பேசினத நான் ஜோக்குனு நான் சொல்லி இருக்க மாட்டேன்’ என்று ஏதோதோ சொல்லி மழுப்புகிறார். மாயாவும் அவருக்கு ஜால்ரா அடித்து காப்பாற்ற பார்க்க, ஆனால் வினுஷாவோ  தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ‘நிக்சன் விவகாரத்தை பற்றி பேசி மாயா, பூர்ணிமா கேங்கின் முகத்திரையை கிழித்துள்ளார்.  இது தொடர்பான வீடியோக்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

2 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

2 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

2 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

2 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

2 மணத்தியாலங்கள் ago