#image_title
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90-ஸ் காலகட்டத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மனதில் இடம் பிடித்தவர் வினு சக்கரவர்த்தி. கடந்த 2017-ஆம் ஆண்டு தனம் தனது 71ஆவது வயதில் வினுச்சக்கரவர்த்தி உயிரிழந்தார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நகைச்சுவை, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வினு சக்கரவர்த்தி திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார். இந்த நிலையில் நடிகர் பாவா லட்சுமணன் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அவர் சினிமா பிரபலங்களுடன் தனக்கு நடந்த அனுபவங்கள் குறித்து பேசினார். பாவா லட்சுமணன் வினு சக்கரவர்த்தி பற்றி கூறியதாவது, ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இயக்குனர் காலை 7 மணிக்கு ஷூட்டிங் ஆரம்பித்து விடும் என கூறினார். இயக்குனர் உட்பட அனைவரும் அங்கு காத்துக் கொண்டிருந்தோம்.
வினு சக்கரவர்த்தி மட்டும் வரவே இல்லை. அவரை அழைப்பதற்காக ரூமிற்கு சென்றோம். அங்கு அவர் தூங்கிக் கொண்டிருந்தார். உடனே வினு சக்கரவர்த்தியை எழுப்பி சார் 7 மணிக்கு வர சொன்னாங்க. இன்னும் தூங்கிட்டு இருக்கீங்க என சொன்னோம். உடனே அவர் மேக்கப் மேனே அடித்து 5 மணிக்கு என்னை எழுப்ப தானே சொன்னேன் என கோபத்தில் பேசியுள்ளார். அந்த மேக்கப் மேன் சிவாஜி சாருக்கு கிளாஸ் ஒர்க் செய்தவர்.
உடனே அவர் நீ எல்லாம் ஒரு ஆள் நான் சிவாஜிக்கே மேக்கப் போட்டவன் என சொல்லி பதிலுக்கு வினு சக்கரவர்த்தியை அடித்துள்ளார். இருவருக்கும் இடையே அடிதடி நடந்துள்ளது. பின்னர் ஷூட்டிங் வந்த வினு சக்கரவர்த்தியிடம் இயக்குனர் கோபத்தில் என் சார் இவ்வளவு லேட்டு நாங்கள் உங்கள் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறோம் என கூறியுள்ளார். உடனே வினு சக்கரவர்த்தி சாரி தம்பி இனிமேல் இப்படி நடக்காது என கூறியதாக பாவா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பமாக, சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சித்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் உருவான பெரும் அலையில் நாம்…
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் செங்கோட்டையன் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி,…
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை…