90-களில் கலக்கிய நடிகை மாதுரியை ஞாபகம் இருக்கா..? ஒரு வழக்கில் சிக்கி மொத்தமாக காலியான சோகம்..

By vinoth

Updated on:

நடிகை மாதுரியை தற்கால தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பழைய படங்களைப் பார்ப்பவர்களுக்கு இவரை நன்றாக ஞாபகம் இருந்திருக்கும். இயக்குனர் விசு இயக்கிய சூப்பர் ஹிட் திரைப்படமான சம்சாரம் அது மின்சாரம் படத்தில் சந்திரசேகரின் மனைவியாக நடித்திருப்பார்.

கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் தன் கணவனோடு தனிமையில் இருக்க முடியவில்லை என்பதை வெளிப்படுத்தும் சிக்கலான கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்திருப்பார். இதன் பின்னர் விசு இயக்கிய பல படங்களில் நடித்தார்.

   

தமிழ் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்திருக்கிறார் மாதுரி. ஆனால் அவையெல்லாம் கிளாமர் வேடங்களே. அதன் பின்னர் தமிழில் மனிதன் மற்றும் சிவா ஆகிய படங்களில் ரஜினிக்கு தங்கையாக நடித்தார். விசு படங்களில் நடிக்க தொடங்கிய பின்னர் அவர் மீதான கிளாமர் இமேஜ் மாறியது.

பாலைவன ரோஜாக்கள்’ ’மனிதன்’ ’மேகம் கருத்திருக்கு’ ’ஒரே ரத்தம்’ ’மைக்கேல் ராஜ்’ ’காவலன் அவன் கோவலன்’ ’பரிசம் போட்டாச்சு’ ’வளையல் சத்தம்’, பெண்மணி அவள் கண்மணி’ ’குற்றவாளி’ ’காளிச்சரண்’ ’இரண்டில் ஒன்று’ ’சகாதேவன் மகாதேவன்’ ’மூடு மந்திரம்’ ஆகியவை அவர் நடித்ததில் குறிப்பிட்டு சொல்லத்தகுந்தவை.

ஒரு கட்டத்தில் மார்க்கெட் இல்லாமல் போன மாதுரி சினிமாவில் இருந்து காணாமல் போனார். அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு அவர் பெண்களை வைத்து விபச்சாரம் செய்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது அவரை திரையில் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதுதான் மாதுரி கடைசியாக புகழ் வெளிச்சத்தில் இருந்த சம்பவம். அதன் பிறகு அவர் என்ன செய்கிறார் என்பதே யாரும் அறியாத ரகசியமாக இருக்கிறது. மீண்டும் அவரை திரையில் காண ரசிகர்கள் இன்றும் ஆர்வமாக உள்ளனர். ஆனால் அது நடக்கும் சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை.