பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் வருகையை பாஜக தரப்பு ஒரு மாற்றாகக் கருதுவதை இந்தப்பதிவு உணர்த்துகிறது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், பாஜகவின் இந்த விமர்சனத்திற்குத் தவெக தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
வினோஜ் செல்வத்தின் சகோதரரும், மதுரவாயல் தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினருமான ரேவந்த் சரண், தனது சகோதரரின் பதிவை ரீட்வீட் செய்து பாஜகவை விமர்சித்துள்ளார். “களத்தின் பெயர்: தமிழக சட்டசபை, களத்தில் உள்ள உறுப்பினர்கள்: 1” எனப் பதிவிட்டு, தமிழக சட்டசபையில் பாஜகவின் பலம் மற்றும் இருப்பை மறைமுகமாகக் கேலி செய்துள்ளார். அண்ணன் – தம்பி இருவருக்கும் இடையேயான இந்த எக்ஸ் தள மோதல் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.
