“அதே வெறியுடன் மீண்டும் களத்திற்கு திரும்புகிறேன்” ஓய்வு முடிவை வாபஸ் பெற்ற வினேஷ் போகத்…!!

By Soundarya on மார்கழி 12, 2025

Spread the love

பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தனது ஓய்வு முடிவை வாபஸ் பெற்றுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தகுதி நீக்கம் காரணமாக, மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அவர் முன்பு அறிவித்திருந்தார். இந்நிலையில், “அதே வெறியுடன் மீண்டும் களத்திற்குத் திரும்ப உள்ளேன்” என்று உணர்ச்சி பொங்கப் பதிவிட்டுள்ளார்.

விளையாட்டுக்கு வெளியே, வினேஷ் போகத் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது அவர் ஹரியானாவின் ஜூலானா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக (MLA) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.