விநாயகர் சதுர்த்தி வழிகாட்டு நெறிமுறை…. எந்த சிலைகளுக்கு தடை? எங்கு கரைக்க வேண்டும்?… தமிழக அரசு வெளியிட்ட முழு விவரம்….!

By Nanthini on புரட்டாதி 5, 2026

Spread the love

சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாப்பதில் தமிழகம் எப்போதுமே முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. நிலவளம், நீர்வளம் மற்றும் வான்வளம் ஆகியவற்றைப் போற்றி வாழ்வது நமது தொன்மையான பண்பாட்டின் ஓர் அங்கமாகும். நாம் பயன்படுத்தும் நீர்நிலைகளான ஆறுகள், குளங்கள் மற்றும் கடல் பகுதியே நமக்கான பிரதான குடிநீர் ஆதாரங்களாக விளங்கின. அத்தகைய இயற்கை வளங்களை எவ்வித பாதிப்புமின்றி அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது குடிமக்களாகிய நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும்.

வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை இயற்கைச் சூழலுக்குப் பாதகமில்லாத வகையில், தெய்வீகச் சிறப்புடன் கொண்டாட வேண்டியது அவசியமாகிறது. மத்திய மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியங்களின் வழிகாட்டுதலின்படி, நீர்நிலைகளின் தூய்மையைப் பாதுகாக்கப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் போன்ற மக்காதப் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் சிலைகள் நீர்நிலைகளைத் தீவிரமாகப் மாசுபடுத்தக்கூடும் என்பதால், அவற்றை முற்றிலும் தவிர்த்து, இயற்கை முறையில் களிமண்ணால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளைப் வழிபாட்டிற்குப் பயன்படுத்த வேண்டும்.

   

சிலைகளின் தயாரிப்பு மற்றும் அலங்காரத்திலும் இயற்கைச் சார்ந்த வழிமுறைகளையே பின்பற்ற வேண்டும். செயற்கை சாயங்கள், எனாமல் மற்றும் நச்சு இரசாயன வண்ணப்பூச்சுகளுக்குப் பதிலாக, நீரில் எளிதில் கரையக்கூடிய மற்றும் மக்கக்கூடிய இயற்கை சாயங்களையேப் பயன்படுத்த வேண்டும். மேலும், சிலைகளுக்கான ஆபரணங்கள் மற்றும் பந்தல் அலங்காரங்களுக்கு உலர்ந்த மலர்கள், வைக்கோல் மற்றும் மரங்களின் இயற்கை பிசின்களைப் பயன்படுத்துவது நீர்நிலைகளின் தரத்தை உயர்த்த உதவும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களைப் பந்தல்களில் பயன்படுத்துவதை மக்கள் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

   

வழிபாட்டுக்குப் பிறகு விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தால் பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும். இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம். விநாயகர் சதுர்த்தி என்பது இறைவனை வழிபடும் திருவிழா மட்டுமல்லாமல், நம் இயற்கையின் அழகையும் தூய்மையையும் பாதுகாக்கும் நன்னாளாகவும் அமைய வேண்டும். நம் தமிழகத்தின் வழிவழி பாரம்பரியமான சுற்றுச்சூழல் பாதுகாப்பை நிலைநிறுத்த, இந்த விதிகளுக்குட்பட்டு விழாவினைக் கொண்டாடுவோம்.