BREAKING: தவெக-வுக்கு விழுந்த முதல் அடி… ஆதவ் அர்ஜுனா வேட்புமனு நிறுத்தி வைப்பு… தேர்தல் களத்தில் உச்சகட்ட பதற்றம்…!

Spread the love

தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று விறுவிறுப்பாகத் தொடங்கியது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. குறிப்பாக, நடிகர் விஜய்யின் வேட்புமனுவில் சொத்து மதிப்பு விவரங்கள் தொடர்பாக பாமக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரது மனு முறைப்படி ஏற்கப்பட்டது. இதனால் தவெக தொண்டர்கள் உற்சாகமடைந்த நிலையில், வில்லிவாக்கம் தொகுதியில் அக்கட்சிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுயேச்சை வேட்பாளரான முரளி வினோத் என்பவர் ஆதவ் அர்ஜுனாவின் மனுவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தனது பிரமாணப் பத்திரத்தில் ஆதவ் அர்ஜுனா தனது மனைவியின் பெயரில் உள்ள 35 நிறுவனங்களின் பெயர்களை மறைத்துவிட்டதாகவும், மேலும் அவரது கைவசம் உள்ள 2 கோடி ரூபாய் ரொக்கப் பணம் குறித்த விவரங்களில் குளறுபடி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இந்த புகாரால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

வேட்புமனுவில் சொத்து மற்றும் நிறுவன விவரங்களை மறைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அவரது மனுவை உடனடியாக ஏற்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். இது குறித்து முடிவெடுக்க தேர்தல் பார்வையாளரின் வருகைக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். ஒருவேளை குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் மனு தள்ளுபடி செய்யப்பட வாய்ப்புள்ளதால், வில்லிவாக்கம் தொகுதி தேர்தல் களம் தற்போது பெரும் பதற்றத்தில் உள்ளது. மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள சூழலில், இந்த மனு பரிசீலனை முடிவு தவெக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

மனைவியின் பிறந்தநாளன்றே அரங்கேறிய சோகம்…! “தவறு நடந்திருந்தால் மன்னித்து விடு… குட்பை…” மெசேஜ் அனுப்பி சாப்ட்வேர் ஊழியர் தற்கொலை… பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் குகட்பள்ளி தேவினகர் பகுதியைச் சேர்ந்தவர் முலுகுரி ரமேஷ் (40). மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர்,…

3 minutes ago

அய்யய்யோ கடவுளே… கண் இமைக்கும் நேரத்தில்… சாலைக்கு ஓடிய குழந்தையால்… நேர்ந்த கோர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சாலையோரத்தில் குழந்தைகளை விளையாட அனுமதிப்பது ஆபத்தானது. குழந்தைகள் விளையாடும் உற்சாகத்தில் கவனமின்றி திடீரென சாலைக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இது அவர்களின்…

10 minutes ago

“தடம்புரண்ட பைக்… பின்னாலேயே மோதிய கார்…” வேலை முடிந்து வீடு திரும்பிய தம்பதி பலி…. பெரும் சோகம்…!!

தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சிக்னல் அருகே புதன்கிழமை மாலை 5 மணி அளவில் கோர…

13 minutes ago

ஐயோ கடவுளே… கணவனை அடித்துக் கொன்றுவிட்டு… வழிப்பறி நாடகம் போட்ட மனைவி… கள்ளக்காதலனுடன் சிக்கியது எப்படி?… பகீர் பின்னணி…!

சேலம் மாவட்டம் ஓமலூர் - சங்ககிரி சாலையில் காரில் பிளை ஆஸ் பிரிக்ஸ் அதிபர் பூபதி ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டுக்…

18 minutes ago

அட இத யாராவது கவனிச்சீங்களா?… அமைச்சர் ரமேஷ் கையில் இருக்கும் கருவியில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?…. வெளிவந்த சீக்ரெட்….!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களின் ஆடைகள், அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் போன்றவை பெரும்பாலும் பொதுமக்கள்…

40 minutes ago

“இந்தியாவுக்கு அமெரிக்கா வைத்த செக்”…. மோடி-ஈரான் அதிபர் சந்திப்பால் கடுப்பான டிரம்ப் நிர்வாகம்…. சட்டென களத்தில் இறங்கி அமெரிக்கா போட்ட போடு….!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத்…

53 minutes ago