ஐயோ… உயிர் போனப்பறம்தான் வருவீங்களா சார்?… சிறுத்தை தாக்குதலால் கொதித்தெழுந்த கிராம மக்கள்… நெடுஞ்சாலையில் போலீசிடம் அதிரடி மோதல்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

By Swetha on ஐப்பசி 10, 2026

Spread the love

புளி கிராமத்தைச் சேர்ந்த பீனா தேவி என்ற பெண் அம்தர் தரௌலி கிராமத்திற்கு அருகில் புல் வெட்டிக் கொண்டிருந்தபோது சிறுத்தை தாக்குதலில் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பௌரி-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியலைத் தவிர்க்கச் சென்ற காவல்துறையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளும் வாக்குவாதமும் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

   

https://twitter.com/KumaonJagran/status/2108820436264067542/video/1

   

தாங்கள் நீண்ட காலமாக பயத்துடனேயே வாழ்வதாகவும், வனத்துறையினர் உயிர் இழந்த பிறகு மட்டுமே வந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.