சீயானுக்கு தடையாக நிக்கும் நடிப்பு அசுரன்.. ராயனின் பிடிவாதத்தால் தள்ளிப்போகும் ‘தங்கலான்’..

By Mahalakshmi on ஜூன் 10, 2024

Spread the love

விக்ரமின் தங்களான் திரைப்படம் தள்ளிப்போனதற்கு காரணம் நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் தான் என்று தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விக்ரம் எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் முழு அர்ப்பணிப்போடு நடித்து நல்ல பெயர் வாங்குபவர். இவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் எல்லாம் பார்ப்பதற்கு அவ்வளவு சிறப்பாக இருக்கும். பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு கிடைத்த பாராட்டை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள பீரியட் திரைப்படம் தங்கலான்.

   

   

இந்த திரைப்படம் சுதந்திரப் போராட்ட காலத்தை ஒட்டி கேஜிஎஃப் மக்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக இந்த திரைப்படம் உருவாகி இருக்கின்றது. இதில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார் விக்ரம். இந்த படத்தில் வயதானவர் மற்றும் இளைஞர் என இரு வேறு கெட்டப்களில் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே மேலும் ஆர்வத்தை அதிகரித்து இருந்தது.

 

கோலார் தங்கவயலில் தமிழர்கள் கடுமையான உழைப்புக்கு நிர்பந்திக்கப்பட்டதை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு கோலார் தங்கவயல், சென்னை, மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்ட.து முதலில் இந்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கிராபிக்ஸ் பணிகள் நிறைவடையாத காரணத்தினால் தள்ளிவைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஒரு வழியாக ஜூன் 13ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று முடிவெடுத்த படக்குழு ரெட் ஜெயன்ட் நிறுவனத்திடம் கேட்டபோது அந்த சமயத்தில் தான் ராயன் திரைப்படம் வெளியாக இருக்கின்றது என்று தெரிவித்து விட்டார்கள்.

இந்நிலையில் இது குறித்து தனஞ்செயன் அந்த பேட்டியில் தெரிவித்திருந்ததாவது முதலில் “ஜூன் 13ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு ரெட் ஜெயன்ட் நிறுவனத்திடம் கேட்டபோது அந்த சமயத்தில் தான் ராயன் திரைப்படம் வெளியாகின்றது என்று தெரிவித்து விட்டார்கள். இதனால் ஜூலை 26 ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம் என முடிவெடுத்து இருந்தோம்.

பின்னர் ஜூன் ஏழாம் தேதி தான் கூறினார்கள் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை என்று இது சற்று கவலையை கொடுத்தது. தொடர்ந்து ஜூன் 26 ஆம் தேதி தான் ராயன் படம் வெளியாகின்றது என்று கூறிய காரணத்தினால் மீண்டும் நாங்கள் பின்வாங்கி விட்டோம். சரி அடுத்த மாதம் வைத்துக் கொள்ளலாம் என்று பார்த்தால் ஆகஸ்ட் 5ஆம் தேதி புஷ்பா திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இதனால் தற்போது வரை தங்களது படத்தின் ரிலீஸ் தேடியை நாங்கள் முடிவு செய்யாமல் இருக்கின்றோம்” என அவர் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.