Categories: சினிமா

என்னது வானத்தைப் போல திரைப்படம் ஜனகராஜுக்காக எழுதப்பட்டதா?… விஜயகாந்த் உள்ளே வந்ததும் நடந்ததும்!

Spread the love

1990-ஆம் ஆண்டு ரிலீசான புது வசந்தம் படம் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தவர் விக்ரமன். அந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து 90 களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார்.

அதன் பின்னர் அவர் இயக்கிய நான் பேச நினைப்பதெல்லாம், கோகுலம், சூர்யவம்சம், பூவே உனக்காக, வானத்தைப் போல போன்ற சூப்பர் ஹிட் ஆகி வசூல் மழை பொழிந்தன. ஆனால் 2000 களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் ட்ரண்ட் மாற அவரின் மெலோ டிராமா கதைகள் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

அதனால் வரிசையாக அவர் இயக்கிய படங்கள் தோல்வி அடையத் தொடங்கின. அப்படி அவர் இயக்கி படுதோல்வி அடைந்த படங்களில் ஒன்றுதான் பரத் மற்றும் ஜெனிலியா நடித்த சென்னை காதல் திரைப்படம். அந்த படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு அந்த படத்தின் தோல்வி குறித்து பேசியுள்ளார்.

அவர் இயக்கியதிலேயே மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் என்றால் அது விஜயகாந்த் நடித்த வானத்தைப் போல திரைப்படம். அதில் விஜயகாந்த் இரட்டை வேடங்களிலும் பிரபுதேவா, மீனா, லிவிங்ஸ்டன் ஆகியோரும் முக்கிய வேடங்களிலும் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் முதலில் விஜயகாந்தே இல்லையாம். இயக்குனர் விக்ரமன் அந்த மூத்த அண்ணன் கதாபாத்திரத்தில் ஜனகராஜ் நடித்தால் நன்றாக் இருக்கும் என முடிவு செய்திருந்தாராம். ஆனால் சூரியவம்சம் ஹிட்டுக்கு ஏன் ஜனகராஜை வைத்து படம் பண்ண வேண்டுமென தயாரிப்பாளர்கள் வற்புறுத்தி விஜயகாந்தை நடிக்க வைக்கலாம் என சொன்னதும் வேறு வழியில்லாமல் கதையை மாற்றினாராம்.

விஜயகாந்த் உள்ளே வந்ததும் அவரது கதாபாத்திரத்தை இரட்டை வேடமாக்கி விட்டாராம். மூத்த விஜயகாந்துக்கு எமோஷனலானக் காட்சிகளும், இளைய விஜயகாந்துக்கு மீனாவுடனான காதல் மற்றும் தொழிலில் முன்னேறுவது போன்ற காட்சிகளும் செருகப்பட்டு ஒரு பேமிலி டிராமாவாக வானத்தைப் போல உருவாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

vinoth

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

7 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

7 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

7 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

8 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

8 மணத்தியாலங்கள் ago