Categories: சினிமா

யார்யா அந்த வயது 60 வயசு தாத்தா?.. படம் ரிலீஸானதும் அது நெப்போலியன்தான் என நம்பாத பிரபலங்கள்!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். திமுக பிரமுகர் கே என் நேருவின் நெருங்கிய உறவினரான இவர் பாரதிராஜாவின் அறிமுகத்தால் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து வில்லனாக நடித்து வந்த அவருக்கு ரஜினிக்கு வில்லனாக நடித்த ‘எஜமான்’ திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பின்னர் ’சீவலப்பேரி பாண்டி’ எனும் படத்தின் கதாநாயகன் ஆனார். அந்த படம் வெற்றிப் பெற்றதை அடுத்து சீவலப்பேரி பாண்டி போன்ற சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும் அவரால் கதாநாயகனாக ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் நிலைக்க முடியவில்லை. பின்னர் மீண்டும் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினர்.

அதில் கமல்ஹாசனோடு அவர் நடித்த விருமாண்டி மற்றும் தசாவதாரம் ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன. தன்னுடைய மகனின் உடல்நிலை காரணமாக அவர் இப்போது அமெரிக்காவிலேயே நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் அவர் பாரதிராஜா இயக்கத்தில் தான் நடித்த முதல் படமான புது நெல்லு புது நாத்து திரைபப்ட அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார்.  “நடிகனாக வேண்டும் என பல தடவை பாரதிராஜாவை சந்தித்து கடைசியில் அந்த பட வாய்ப்பை வாங்கினாராம். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றால் அங்கு அவர் தனக்கானக் காட்சிகளை எடுக்கவேயில்லையாம்.

கடைசியாக ஒருநாள் அழைத்து எனக்கு வயசான கெட்டப் போட்டு அங்குமிங்கும் நடக்கவிட்டார், வில்லத்தனமாக சிரிக்கவைத்தார். இவ்வளவு நாள் காத்திருந்து ஒரு கெழவன் வேஷம்தான் போடணுமா என நான் யோசித்தேன். படம் முடிந்து ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட்டான போது யாருக்குமே என்னை அடையாளம் தெரியவில்லை.

சினிமாக் காரர்களே பலரும் அந்த வயசான தாத்தா யார்யா? நல்லா நடிச்சிருக்காரா என பாராட்டினார்கள். அது நான்தான் என சொன்ன போது யாருமே நம்பவில்லை. அப்போது எனக்கு 27 வயதுதான் ஆகியிருந்தது.” எனப் பகிர்ந்துள்ளார்.

vinoth

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

8 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

8 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

9 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

9 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

9 மணத்தியாலங்கள் ago