தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் விக்ரம் சுகுமாரன். இவர் வெற்றிமாறனின் நெருங்கிய நண்பரும் கூட. வெற்றிமாறனின் ஆடுகளம் படத்திற்காக பல ஆய்வு செய்தது மற்றும் பல வேலைகளை செய்தவர். அது மட்டுமல்லாமல் மதயானை கூட்டம் என்ற திரைப்படத்தையும் இவர் இயக்கியிருந்தார். அந்த திரைப்படத்தில் நடிகர் கதிர், நடிகை ஓவியா மற்றும் வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த 2013 ஆம் ஆண்டு மதயானை கூட்டம் திரைப்படம் வெளியானது. தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கக்கூடிய மொய் விருந்து பற்றியும் உறவுகள் குறித்தும் அதற்குள் எழக்கூடிய சிக்கல்கள் பற்றியும் படத்தில் அற்புதமாக காண்பிக்கப்பட்டிருந்தது.
இந்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக ரசிகர்கள் கொண்டாடினர். இந்த திரைப்படத்திற்கு பிறகு படம் எதுவும் இயக்காமல் இருந்த விக்ரம் சுகுமாரன் சாந்தனுவை வைத்து ராவண கோட்டம் என்ற திரைப்படத்தை ஆரம்பித்தார். அந்தத் திரைப்படத்தில் கயல் ஆனந்தி மற்றும் பிரபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு இந்த திரைப்படம் வெளியான நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். ஆனால் இந்த படம் படு தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து விக்ரம் சுகுமாரன் எந்த திரைப்படமும் இயக்காமல் உள்ளார். இந்த நிலையில் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது பேசு பொருளாகியுள்ளது.
அதாவது அவர் வெளியிட்டுள்ள பதிவில், மதயானை கூட்டம் படத்தை இயக்கியதற்கு பிறகு எனக்கு வேறு பட வாய்ப்பு ஏதும் வரவில்லை. நானும் யாரும் அழைக்கவில்லை என்று தான் நினைத்தேன். ஆனால் எனக்கு வந்த வாய்ப்புகளை எல்லாம் ஒருவன் தடுத்திருக்கிறான் என்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன். அவன் வேறு யாரும் அல்ல அவனை நான் தான் நடிகன் ஆக்கினேன். அவன் ஒரு பச்சை துரோகி, என்னுடைய எதிரிக்கு கைக்கூலியாக செயல்பட்டு இருக்கிறான். இதனை கேட்டதிலிருந்து ஆண்டவன் மீது தான் ஆத்திரம் வருகின்றது. ஆத்திரப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை என்று விக்ரம் சுகுமாரன் குறிப்பிட்டுள்ள நிலையில் அவர் சொல்லும் ஹீரோ யார் என்று ரசிகர்கள் ஆராய தொடங்கியுள்ளனர்.
மழைக்கால பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், ஒவ்வொரு…
கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மேற்கு மண்டலத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்த செந்தில் பாலாஜி, 2026 சட்டமன்றத் தேர்தலில்…
தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிப் பதவிகளை வழங்குவதற்காகப் பணம் பெறப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை…
சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்த ஓய்வுபெற்ற பெண் அதிகாரி கைது…
இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் மூலம் 'பைனான்ஸ் வித் ஹரிஷ்' என்ற பெயரில் நிதி ஆலோசனைகளை வழங்கி வந்த பிரபல இன்ஃப்ளூயன்ஸர்…
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை மேகங்கள் தீவிரமாக…