Categories: சினிமா

பொண்ணோட சொந்தக்காரர் யாருமே வரல.. ஜப்பானில் கல்யாணத்தை நடத்த காரணமே இதுதான்.. நெப்போலியன் மகன் திருமண ரகசியத்தை உடைத்த பயில்வான்..!

Spread the love

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் நடிகராக 90களில் கலக்கியவர் தான் நடிகர் நெப்போலியன். இப்படி சினிமாவில் கொடி கட்டி பறந்த இவர் சினிமா மற்றும் அரசியல் என அனைத்தையும் விட்டுவிட்டு தன்னுடைய மகனுக்காக அமெரிக்காவில் செட்டில் ஆனார். நெப்போலியன் மூத்த மகனுக்கு அரியவகை தடைப்பிடிப்பு நோய் இருந்ததால் சரியான சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு சென்றனர். அங்கு நெப்போலியன் ஐடி கம்பெனி உருவாக்கி பல தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வந்தார். பிறகு இந்த பொறுப்புகளை எல்லாம் மூத்த மகன் தனுஷின் கையில் ஒப்படைத்தார்.

இந்த நிலையில் நெப்போலியன் தன்னுடைய சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரை பட்டியில் வசிக்கும் அக்ஷயா என்ற பெண்ணை தனது மூத்த மகன் தனுசுக்கு திருமணம் செய்ய நிச்சயத்தார். அது தொடர்பான தகவலை அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்த நிலையில், தன்னுடைய மகன் திருமணம் ஜப்பானில் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு கடல் வழியாக பயணம் மேற்கொண்டு அங்கு நேற்று பிரமாண்டமாக திருமணத்தை நடத்தி முடித்தார். இந்த திருமணத்தை கோலாகலமாக தமிழ் முறைப்படி நடத்த விரும்பிய நெப்போலியன் தனது மகன் திருமணத்திற்கு வரும் பிரபலங்களின் பயண செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் நெப்போலியன் மகன் திருமணம் பற்றி பயில்வான் ரங்கநாதன் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், திருமணத்திற்கு முன்பு தனுசு உடன் அக்ஷயா வீடியோ காலில் பேசியுள்ளார். அப்படியே பேச பேச அவரை பிடித்து போய்விட்டது. பிறகு தான் அவரைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நெப்போலியன் மகன் தனுசுக்கு ஜப்பானை பார்க்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை இருந்துள்ளது. இதனால் இவர் முதலில் ஜப்பான் சுற்றி பார்க்க தான் முடிவு செய்துள்ளார்.

இதற்கு இடையில் தனுசுக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டதால் தனது திருமணத்தை ஜப்பானில் நடத்த வேண்டும் என தனுஷ் ஆசைப்பட்டுள்ளார். தனது மகனின் ஆசையை நிறைவேற்ற தான் நெப்போலியன் ஜப்பானில் திருமணத்தை வைத்துள்ளார். மகனின் திருமணத்தை ஜப்பானில் வியந்து பார்க்கும் அளவுக்கு நடத்திவிட்டார். திருமணம் தமிழ்நாட்டில் நடந்திருந்தால் எப்படி நடிகர்கள் வருவார்களோ அதனைப் போலவே சில நடிகர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஜப்பான் சென்று விட்டனர். அவர்களுக்கு திருமணத்தின் போது இந்திய உணவில் எந்த குறையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக நெப்போலியன் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து செய்துள்ளார்.

மேலும் நெப்போலியனின் உறவுக்கார பெண் தான் அக்ஷயா. ஏழ்மையான குடும்பம் என்பதால்தான் இது போன்ற ஒரு தியாகத்தை அந்த பெண் செய்து விட்டார். திருமணத்தில் உறவினர்களால் ஏதாவது குழப்பம் வந்து விடக்கூடாது என்பதற்காக பெண்ணின் சொந்தங்கள் யாரும் வரவில்லை. பெண்ணின் பெற்றோர் மட்டுமே வந்து திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். உண்மையிலேயே அந்தப் பெண்ணுக்கு பெரிய மனசு வேண்டும். நிச்சயம் நெப்போலியன் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு சொத்து 10 கொடுத்து நன்றாக பார்த்துக் கொள்வார் என்று பயில்வான் ரங்கநாதன் பேட்டியில் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

அதிமுகவுக்கு அடுத்த செக்…. தவெகவில் இணையும் 15 எம்.எல்.ஏக்கள்?…. இபிஎஸ்ஸுக்கு பேரதிர்ச்சி…!

தென்காசி சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் மிக முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு…

1 மணத்தியாலம் ago

“எங்களுக்கு கரும்புதான் முக்கியம்”…. சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம்…. பதைபதைக்க வைக்கும் வீடியோ….!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திம்பம் மலைப்பாதை மற்றும் மைசூர் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் எப்போதும் அதிகரித்து…

1 மணத்தியாலம் ago

திடீர் திருப்பம்…. “அந்த 1 முடிவு”… திமுக, பாஜக போட்ட ரகசிய கணக்கு?…. அதிர்ச்சியில் பிரதான கட்சிகள்…. தலைகீழாக மாறும் அரசியல் களம்….!

டிலிமிடேஷன் (தொகுதி மறுவரையறை) விவகாரம் தற்போது இந்திய மற்றும் தமிழக அரசியலில் மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. நாடாளுமன்ற…

2 மணத்தியாலங்கள் ago

பைக் கடைக்குள் நாகப்பாம்பு…. கழுத்தில் சிக்கிய இரும்பு வளையம்…. ஷாக் ஆன மெக்கானிக்… அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…..!

இணையத்தில் தற்போது பாம்புகள் தொடர்பான மீட்பு வீடியோக்கள் பெருமளவில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… மைதானத்தில் பாய்ந்த கல்… ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த நடுவர்… ஈக்வடாரில் பதறவைக்கும் விபரீதம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

ஈக்வடாரில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது, உதவி நடுவர் லெனின் ஒஜேடா என்பவரை மாற்றாட்ட வீரர்கள் அமரும் பகுதியிலிருந்து வீசப்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… என்ன இது?… கிரிக்கெட் மைதானத்தில் ரசிகரை… செருப்பால் அடித்து துவம்சம் செய்த காஷ்மீரி வீரர்… தாயை அசிங்கமாக திட்டியதால்… வெறிக்கொண்டு தாக்கிய அதிர்ச்சி… இணையத்தில் வீடியோ வைரல்…!

ஸ்ரீநகரில்  நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது கஷ்மீர் வீரர் ஒருவர் பார்வையாளரை தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும்…

2 மணத்தியாலங்கள் ago