Categories: சினிமா

காதலரை கரம் பிடித்த நடிகை ரம்யா பாண்டியன்.. கங்கை நதி கரையில் நடந்த திருமணம்..!

Spread the love

ஆந்திரா மற்றும் கேரளாவை சேர்ந்த நடிகைகள் மட்டுமே அதிகம் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக தமிழகத்தை சேர்ந்த நடிகைகள் பல திரையுலகில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர். அதன்படி திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட நடிகை ரம்யா பாண்டியன் சினிமாவில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருடைய சித்தப்பா அருண் பாண்டியன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தாலும் அவருடைய உதவியை நாடாமல் தனியாக வாய்ப்பு தேடி தன்னுடைய முயற்சியில் வெற்றியும் கண்டார்.

இவர் ஜோக்கர் திரைப்படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாகவும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தும் அசத்தினார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்ற போதும் ரம்யா பாண்டியனுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பட வாய்ப்பு பிடிக்க போட்டோ சூட் நடத்துவதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கின. தற்போது இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் யோகா பயிற்சியாளர் லவல் தவான் என்பவரை காதலித்து வருவதாகவும் அவருடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. தனது காதலரின் புகைப்படங்களை ரம்யா பாண்டியன் சமீபத்தில் வெளியிட்டிருந்த நிலையில் இன்று ஷிகேஷில் சிவபுரி கங்கை நதிக்கரையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. திருமணம் ரிஷிகேஷில் நடைபெற்றாலும் வரும் நவம்பர் 15 ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்துகொள்வார்கள் என தெரிகிறது.

Nanthini

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

8 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

9 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

9 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

9 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

9 மணத்தியாலங்கள் ago