தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனர்.. இந்த தேசிய விருது நடிகர் தான் ஹீரோவாம்..!!

By Priya Ram on ஏப்ரல் 3, 2024

Spread the love

இயக்குனர் சிதம்பரம் இயக்கிய மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. சமூக வலைதளங்களில் கண்மணி அன்போடு காதலன் என்ற பாடல் மீண்டும் ஒலிக்க தொடங்கியது. குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தமிழ், கேரளா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

   

 

   

படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், விக்ரம், சித்தார்த், கமல் ஆகியோர் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி உள்ளனர். இதுவரை படம் 220 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.

 

இந்த நிலையில் சிதம்பரம் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிதம்பரம் ஒரு மலையாள படத்தை இயக்க உள்ளார். அந்த படத்தை முடித்த பிறகு விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகர் விக்ரம் கரிகாலன், தங்கலான், கர்ணன் கருடா என அடுத்த,டுத்த படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் சிதம்பரம் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.