அப்போ வாணி போஜன், இப்போ இந்த நடிகையா?.. விக்ரம் படத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்ட நடிகை..!!

By Nanthini on ஆடி 29, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் கௌதம் மேனன். இவரின் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு கிடைக்கும். இவரது இயக்கத்தில் இறுதியாக சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

   

இதனைத் தொடர்ந்து தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். ஆனால் திரைப்படம் வெளியாவதற்கு தொடர்ந்து தாமதம் ஆகி கொண்டே இருக்கிறது. இந்த திரைப்படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் மற்றும் சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

   

 

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் வைத்து திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் கதையில் மாற்றம் செய்திருப்பதால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

விக்ரம் திரைப்படத்தில் நடித்த நடிகைகள் ஏமாற்றம் அடைவது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பு மகான் திரைப்படத்தில் வாணி போஜன் நடித்த காட்சிகளும் இதனைப் போல தான் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.