இறப்பதற்கு கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் பேசுனாரு.. நா சொல்லி தான் அவர் அத செஞ்சாரு.. மறைந்த மாரிமுத்து குறித்து நடிகை விஜி உருக்கம்..

Spread the love

நடிகை விஜி சந்திரசேகர் சினிமாவிலும், டிவி சீரியல்களிலும் நடித்துவரும் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவரது நடிப்பு மிக சிறப்பாக இருக்கும். குறிப்பாக ஆவேசமான காட்சிகளிலும், பாசம் மிகுந்த காட்சிகளிலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தும் கெட்டிக்காரத்தனமான ஒரு நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் விஜி சந்திரசேகர், மறைந்த நடிகர் மாரிமுத்து குறித்து உருக்கமாக சில விஷயங்களை வெளிப்படையாக கூறியிருந்தார். அப்போது விஜி சந்திரசேகர் கூறியதாவது, ஆரோகணம், கடைக்குட்டி சிங்கம் படங்களில் நடிக்கும்போதே நடிகர் மாரிமுத்து எனக்கு அறிமுகமானவராக இருந்தார். அவரது மனைவி, நான் டெய்லரிங் கோர்ஸ் போனபோது எனக்கு டீச்சராக இருந்தார்.

மாரிமுத்து பிரில்லியன்ட் ஆக்டர். இனிமையான நடிகர். படங்களில் அவர் நடித்துக்கொண்டிருந்த போது நீங்கள் ஏன் டெலிவிஷனில் நடிக்க கூடாது எனக் கேட்டதற்கு இல்லம்மா, நமக்கு அது ஒத்து வராதும்மா, சினிமாவுல ஒரு கேரக்டர்ல நடிச்சிட்டு, போனமா, வந்தோமான்னு அதோட முடிச்சிட்டு போயிரலாம். ஆனா டிவியில கமிட்மென்ட் இருக்கும். அவுட்டோர் எல்லாம் போகணும். வேணாமுன்னுட்டாரு. அப்புறம் அவரே ஒருநாள் போன் பண்ணி, ஏம்மா டிவி சீரியல்ல நடிக்க கேக்கறாங்க. நீங்க அன்னிக்கு சொன்னீங்க, அதான் பண்ணலாமான்னு கேக்கறேன்னாரு. தாராளமா பண்ணுங்கன்னு சொன்னேன். ஏன்னா அவர் ஒரு வொண்ட்ர்புல் ஆக்டர். அப்புறம்தான் அந்த ஆதி குணசேகரன் கேரக்டர்ல நடிச்சு, தமிழக மக்கள் மனசுல பெரிய இடத்தை பிடிச்சிட்டார். அவருக்காகவே அந்த சீரியல் பார்க்கறவங்க நிறைய பேர் இருக்காங்க.

ஆனா அவர் இறக்கறதுக்கு ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி ஈசிஆர்ல ஒரு கெட் டு கெதர் நடந்துச்சு. திருச்செல்வம் கலந்துக்கிட்ட அந்த பங்ஷன்ல மாரிமுத்துவும் கலந்துக்கிட்டாரு. அப்போ அவரு என்கிட்ட வந்து பேசும்போது, இப்போ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேம்மா, நீங்க சொன்னது கரெக்ட்தான். டெலிவிஷனில் இப்படி ஒரு அங்கீகாரம் கிடைக்குமுன்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலேன்னு சொன்னார். அது என்னால மறக்க முடியாது. நானும்கூட அப்படித்தான். எனக்கு சினிமா, டெலிவிஷன் என்று ரெண்டு வாய்ப்பு வந்தால், நான் டெலிவிஷனை தான் தேர்ந்தெடுப்பேன். ஏன்னா, ஆபீஸ் போற மாதிரி, காலையில போயிட்டு சாயந்திரம் வந்துடலாம். வீட்டை, குழந்தைகளை பார்த்துக்கலாம். ரொம்ப வசதியா இருக்கும் என்று கூறியிருக்கிறார் நடிகை விஜி சந்திரசேகர்.

admin

Recent Posts

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

1 minute ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

5 minutes ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

26 minutes ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

29 minutes ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

34 minutes ago

“50 வருஷத்துக்கு அப்புறம் வரும் வாய்ப்பு”… விஜய்க்காக களமிறங்கிய அப்பா… இணையத்தை உலுக்கும் வீடியோ…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…

38 minutes ago