இலங்கையில் உள்ள விஜயின் மனைவி சங்கீதாவின் வீட்டை பார்த்துள்ளீர்களா?… முதல் முறையாக வெளியான புகைப்படம்..!!

By Nanthini on ஆடி 28, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார்.

   

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்த படத்தின் முதல் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் கடந்த 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

   

 

 

சங்கீதா இலங்கையில் பிறந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்நிலையில் சங்கீதாவின் இலங்கை வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது. ஆனால் இந்த வீட்டை தற்போது வேறு ஒருவர் வாங்கி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.