நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். மேலும் தமிழக அரசியல் களத்திலும் தவெக என்றும் கட்சி தலைவராகவும் பெரிய கவனம் பெற்றுள்ளார். இந்த சூழலில் அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்த சம்பவம் தளபதி ரசிகர்கள் மத்தியிலும் தவெக கட்சியினர் மத்தியிலும் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி ஒரு குடும்ப விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பது விஜய்க்கு பின்னடைவை தந்து விடுமோ என்ற அச்சத்தை தந்துள்ளது.
இதற்கிடையே அந்த விவகாரத்து மனுவில் விஜயின் மனைவி சங்கீதா ஒரு முக்கிய குற்றச்சாட்டை தனது கணவர் விஜய் மீது கூறியிருக்கிறார். அதில், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை கொண்டு இருந்தார் விஜய். இது எனக்கு 2021 ஏப்ரலில் தெரிய வந்தது. நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன் என்றும் அதில் சங்கீதா கூறியிருப்பதும் பெரிய அளவில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
