tvk

த.வெ.க கட்சி கொள்கை தலைவரான அஞ்சலை அம்மாளை பற்றி பேசிய விஜய்… மெயிசிலிர்த்து கோரிக்கை வைத்த அஞ்சலை அம்மாள் பேரன்…

By admin on ஐப்பசி 28, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் அதிக ஊதியம் பெரும் நடிகராக இருந்து வந்த விஜய் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் இவரை வைத்து படம் இயக்க தயாராக இருந்த போதிலும் தமிழ்நாட்டு மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தில் சினிமாவை விட்டு மக்களுக்காக நான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பத்துடன் அரசியலில் களமிறங்க போவதாக அறிவித்தார் விஜய்.

   

தன்படி நடிகர் விஜய் தனது கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என்றும் கட்சியின் கொடியையும் பாடலையும் சமீபத்தில் வெளியிட்டார். அடுத்ததாக தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏற்பாடுகள் எல்லாம் தடல்புடலாக இருந்தது.

   

கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் விக்கிரவாண்டியில் விஜயின் ஆக்ரோஷமான பேச்சை கேட்பதற்கு கூடினார்கள். விக்கிரவாண்டி சாலையே தவெக கட்சி தொண்டர்களால் ஸ்தம்பித்து போய்விட்டது என்று சொல்லலாம். அப்படி ஒரு ஆரவாரத்துடனும் தொண்டர்களின் அன்பினாலும் மனம் நெகிழ்ந்து போய்விட்டார் விஜய். விழாவை கொடியேற்றி ஆரம்பித்த பிறகு தங்களது கொள்கை தலைவர்களைப் பற்றி முதலில் பேசினார் விஜய். தவெக கட்சியின் கொள்கை தலைவர்களாக பெரியார் அம்பேத்கர் பெருந்தலைவர் காமராஜர் வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆசியோர் தான் என்று பேசினார்.

 

இந்த பேச்சுகளை கேட்ட சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களின் பேரன் விஜய் அவர்கள் பேசியது கேட்டது மிகவும் மெய்சிலிர்க்கும் வகையில் இருந்ததாகவும் அஞ்சலையம்மாள் பற்றி இன்றைய காலகட்டத்தில் பலருக்கு யாருக்குமே தெரிவதில்லை. நான் சிறு வயதில் இருந்த போது அவர்களின் வாழ்க்கை வரலாறு வரலாற்று புத்தகத்தில் இடம் பெற்றது. அதேபோல் மறுபடியும் எனது பாட்டி அஞ்சலை அம்மாள் வாழ்க்கை வரலாறு மறுபடியும் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்று தாழ்மையுடன் கோரிக்கை வைத்திருக்கிறார்.