“மனசுதான்டா கோர்ட்…!” கரூரில் விஜய் பேச்சு… விருமாண்டி வசனத்தைப் பகிர்ந்து… நெட்டிசன்கள் பதிலடி… இணையத்தில் அனல் பறக்கும் விவாதம்…!

By Swetha on ஆடி 10, 2026

Spread the love

கரூரில் தவெக தலைவர் விஜய் பேசிய பேச்சு, இந்த வார இறுதியில் இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கூட்ட நெரிசலில் ஏற்பட்ட மரணம் தொடர்பாகப் பேசிய விஜய், காவல்துறை தங்களை முன்னரே எச்சரித்திருந்தால் நிகழ்ச்சியை ரத்து செய்திருப்போம் என்றும், உள்நோக்கத்துடன் இந்த அசம்பாவிதம் அரங்கேற்றப்பட்டு விட்டது என்றும் குற்றம் சாட்டினார். இவரின் இந்த கருத்துக்குத் தமிழக அரசியல் வட்டாரத்திலும் சமூக ஊடகங்களிலும் ஆதரவும் எதிர்ப்பும் கலந்த கலவையான எதிர்வினைகள் குவிந்து வருகின்றன.

விஜய்யின் இந்த பேச்சுக்கு திமுக ஐடி விங் தரப்பில் கடுமையான மறுப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. விஜய்யின் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு மாறானவை என்று அவர்கள் பதிவிட்டு வரும் நிலையில், இணையவாசிகள் பலர் ‘விருமாண்டி’ திரைப்படத்தில் நெப்போலியன் பேசும் புகழ்பெற்ற “மனசுதான்டா கோர்ட்” என்ற வசனக் காட்சியைப் பகிர்ந்து, தவெகவினரைச் சாடி மீம்களையும் பதிவுகளையும் பரப்பி வருகின்றனர்.

   

மறுபுறம், விஜய்யின் பேச்சு தவெக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரது உரையின் முக்கியப் பகுதிகளை வீடியோ துணுக்குகளாக வெட்டி, சமூக வலைத்தளங்கள் முழுவதும் தவெகவினர் தீவிரமாகப் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.