நான் அரசியல் பேசியதால் என்னுடைய படங்கள் சந்தித்த பிரச்சினை.. சட்டப்பேரவையில் உண்மையை உடைத்த முதல்வர் விஜய்…!!

By Soundarya on ஆனி 23, 2026

Spread the love

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பதிலுரையின் பேசிய முதல்வர் விஜய், தான் திரைத்துறையில் இருந்தபோது சந்தித்த அரசியல் நெருக்கடிகள் குறித்தும், தனது திரைப்படங்களுக்குக் கொடுக்கப்பட்ட முட்டுக்கட்டைகள் குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். “அரசியலைப் பேசியதால் என் படங்கள் சந்தித்த, இதுவரை சந்திக்கும் பிரச்சினை பற்றி எல்லாருக்கும் தெரிந்ததுதான்” என்று அவர் சட்டமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் களத்திற்குள் தான் நுழைவதற்கு முன்பாகவே, தனது திரைப்படங்களின் வாயிலாக மக்கள் சார்ந்த பிரச்சினைகளையும் அரசியல் கருத்துகளையும் பேசியதற்காகப் பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தங்களையும் தடைகளையும் எதிர்கொண்டதை அவர் இதன் மூலம் நினைவு கூர்ந்துள்ளார். தான் தற்பொழுது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையிலும், கடந்த காலங்களில் தனது கலைப்பயணத்தில் ஏற்பட்ட அந்த அரசியல்ரீதியான சவால்கள் மற்றும் அதன் பின்னணி உலகறிந்த உண்மை என்பதை மிக அழுத்தமாகத் தனது பதிலுரையில் பதிவு செய்துள்ளார்.