ட்ரெய்லரை பார்த்துட்டு விஜய் ஒரு ரியாக்ஷன் கொடுத்தாரு பாருங்க.. சத்தியமா எதிர்பார்க்கல.. அதிர்ச்சியில் தயாரிப்பாளர்..!!

By admin on ஐப்பசி 6, 2023

Spread the love

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் திரிஷா இணைந்து நடித்த படம் லியோ இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்த படத்தில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் போஸ்டர்களும் பாடல்களும் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது. வருகிற 19-ஆம் தேதி லியோ திரைக்கு வர உள்ளது.

   

படம் ஆரம்பித்த நாள் முதலே பல்வேறு சிக்கல்கள் எழுந்தது. இந்நிலையில் லியோ படத்திலிருந்து வெளியான நான் ரெடி பாடலில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தது. இதனையடுத்து லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவும் ரத்து செய்யப்பட்டது.பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று லியோ பட ட்ரெய்லர் வெளியானது.

   

 

இந்நிலையில் படம் குறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் லலித், படத்தின் ட்ரெய்லரை எடிட் செய்யும்போது நானும், லோகேஷும் மட்டும் இருந்தோம். ட்ரெய்லரை எடிட் செய்து முடித்துவிட்டு விஜய் சாருக்கு அதனை அனுப்பினோம். அதனை பார்த்துவிட்டு ட்ரெய்லர் சூப்பரா இருக்கு என விஜய் கூறினார். இதனையடுத்து ஹைனா மிருக படபிடிப்பின் போது விஜய் சார் 1000 ஜூனியர் ஆர்டிஸ்ட் மத்தியில் எதுவுமே இல்லாமல் ஹைனா இருப்பது போல கற்பனை செய்து கொண்டு நடித்தார். அதன் பிறகு தான் கிராபிக்ஸில் ஹைனா மிருகம் சேர்க்கப்பட்டது என கூறினார்.