NEWS
விஜயின் தவெக கட்சிக் கொடிக்கு வந்த சிக்கல்… ஆரம்பமே இப்படியா…?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உட்சபட்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். தற்போது தமிழக மக்களுக்கு பணி செய்ய விரும்பி அரசியலில் களம் இறங்கி இருக்கிறார் விஜய். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை நிறுவியுள்ள விஜய் ஆரம்பகட்டமாக பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊத்தகைய வழங்கினார்.
தற்போது அரசியல் பணிகளில் தீவிரமாக இறங்கி இருக்கும் விஜய் இன்று தவெக கட்சியின் கொடியை சென்னை பனையூர் தலைமைச் செயலகத்தில் அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்று கட்சியின் பாடலும் வெளியிடப்பட்டது.
இன்று முழுவதும் விஜய்யின் கட்சிக்கொடியும் பாடலும் இணையத்தில் வைலராகி வந்த நிலையில் தற்போது அந்த கட்சி கொடிக்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது.
விஜயின் தவெக கட்சிக் கொடியில் இரண்டு யானைகள் இடம் பெற்று இருக்கும். பகுஜன் சமாஜ் கட்சியின் கொடியிலும் யானை இடம்பெற்றிருக்கும். இதனால் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியினர் எங்கள் கொடியில் இருக்கும் யானையை தவெக கட்சி கொடியில் பயன்படுத்துவது தேர்தல் விதிக்கு எதிரானது.
ஆகவே தவெக கட்சி கொடியில் இருக்கும் யானை சின்னத்தை உடனடியாக நீக்க வேண்டும். அப்படி நீக்கவில்லை என்றால் உடனே நாங்கள் வழக்கு தொடர்வோம் என்று அறிக்கையை வெளியிட்டுள்ளனர். கட்சிக்கொடி அறிமுகப்படுத்தப்பட்ட இன்றைய நாளே சிக்கலாகி விட்டதா என்று இணையவாசிகள் பேசி வருகின்றனர்.