உங்களுக்கு தில்லு, திராணி இருந்தால்… இதை செஞ்சு காட்டுங்க பார்க்கலாம்… அரசியல்வாதிகளுக்கு விஜய் பகிரங்க சவால்…!!

By Soundarya on மாசி 13, 2026

Spread the love

சேலம் சீலநாயக்கன்பட்டியில் இன்று (பிப்ரவரி 13, 2026) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் மற்றும் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக இரண்டையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதில், தனக்கு அரசியல் அனுபவம் இல்லை எனக் கூறுபவர்களுக்குப் பதிலடி கொடுத்த விஜய், “அனுபவம் என்று சொல்கிறார்களே, அதிகாரத்தை வைத்து மக்கள் பணத்தைக் கொள்ளையடித்ததைத் தவிர வேறு என்ன அனுபவம் இவர்களிடம் இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பினார். தங்களுக்குக் கொள்ளையடிப்பதில் அனுபவம் இல்லை என்றும், நேர்மையான நிர்வாகத்தைத் தரத் தயார் என்றும் அவர் உறுதியளித்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருமே மற்றவர்களால் தொடங்கப்பட்ட கட்சிகளுக்குத் தலைமை தாங்குவதாகக் குறிப்பிட்ட விஜய், “என்னைப் போன்று சொந்தமாகத் தனிக்கட்சி தொடங்கி 1 சதவீத வாக்குகளைப் பெற்றுத் தரும் தில்லோ, திராணியோ இவர்களுக்கு இருக்கிறதா?” எனப் பகிரங்கச் சவால் விடுத்தார்.  திமுக அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமைத் தொகை உயர்வு மற்றும் சிறப்பு கோடைகால உதவித் தொகையை “ஓட்டுக்குக் காசு கொடுக்கும்” முயற்சி என விமர்சித்தார். “பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள், ஆனால் ஓட்டை நம் கட்சிக்கு (விசில் சின்னம்) போடுங்கள்” எனத் தொண்டர்களிடம் கூறினார். மேலும், மாநிலத்தில் நிலவும் நடைமுறைகளை “ஸ்டாலின் ஆப்பரேட்டிங் புரோசிஜர்” (Stalin Operating Procedure) என கிண்டல் செய்தார்.