இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘உன்னை நினைத்து’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால், இந்தப் படத்தில் முதலில் நாயகனாக நடித்தவர் தளபதி விஜய் என்பது பலரும் அறிந்திராத ஒரு சுவாரசியமான தகவல். அண்மையில் இத்திரைப்படத்தின் “என்னை தாலாட்டும்” பாடல் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, விக்ரமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழைய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அந்தப் பாடலின் சில காட்சிகள் விஜய்யை வைத்து படமாக்கப்பட்டிருப்பதைக் கண்டு ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தன்னிடமிருந்த பழைய வீடியோவை வெளியிட்டுள்ள விக்ரமன், சூர்யா மற்றும் விஜய் இருவருமே சிறந்த கலைஞர்கள் என்பதால் இதை ஒப்பீடு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், விஜய் அரசியலுக்குச் செல்வதற்காகத் திரையுலகை விட்டு விலகுவது தனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
View this post on Instagram
