கரூரில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சமீபத்தில் நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர்களை கைது செய்யவும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இப்படியான நிலையில் கரூர் துயர சம்பவத்தில் ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரின் ஜாமின் மனுக்கள் இன்று 12:00 மணிக்கு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. நீதிமன்ற உத்தரவு வந்தவுடன் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜாமின் கிடைத்தால் உடனே கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவது பற்றியும், ஜாமின் கிடைக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் விஜய் முக்கிய முடிவை எடுக்க உள்ளார்.
