Connect with us

என்னது.. ஞாயிறுக்கிழமை மாலை 6 மணிக்கு சன் டிவியில்’ LEO’ வா..? வெளியான வீடியோவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்…

CINEMA

என்னது.. ஞாயிறுக்கிழமை மாலை 6 மணிக்கு சன் டிவியில்’ LEO’ வா..? வெளியான வீடியோவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்…

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர்  19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கம்,  தளபதி விஜய்யின் வெறித்தனமான நடிப்பு என அனைத்தும் சேர்ந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி இழுத்துள்ளது.

   

நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கு கடைசி வரை ஏகப்பட்ட சர்ச்சைகளும் பிரச்சனைகளும் வெடித்தன. இறுதி வரை படம் சுமூகமாக ரிலீஸ் ஆகுமா? என்கிற சிக்கல் நிலவி வந்தது. ஆனாலும் அனைத்து பிரச்சனைகளையும் அசால்ட்டாக தட்டி விட்டு லியோ தற்பொழுது சாதனை புரிந்து வருகிறது. மேலும் இத்திரைப்படம் ரிலீசான முதல் நாளே  உலகளவில் 148.5 கோடி ரூபாயை வசூலித்ததன் மூலமாக தளபதி என்றும் மாஸ் தளபதி தான் என்பதை நிரூபித்தது.

இதைத்தொடர்ந்து லியோ உலகளவில் ரூ. 597 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் நாளுக்கு நாள் படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது. இன்னும் பல திரையரங்குகளில் லியோ திரைப்படம் வெற்றிகரகமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நிலையில், சன் தொலைக்காட்சி லியோ திரைப்படத்தை ஒளிபரப்பு செய்யப்போவதாக வீடியோ வெளியிட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதன்படி லியோ திரைப்படம் வரும் ஞாயிறு மாலை 6.30 மணியளவில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது என்று வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவல் முற்றிலும் பொய்யானது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சன் தொலைக்காட்சியின் ட்விட்டர் கணக்கை போன்று கணக்கு ஒன்றை தொடங்கி அந்த பக்கத்தில் இதனை பதிவு செய்துள்ளார். தற்பொழுது இப்பதிவானது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதோ அந்த பதிவு…

 

Continue Reading
To Top