இது சும்மா ட்ரைலர் தான்… மெயின் பிக்சர் இனிதா… விஜய் அரசின் முதல் பட்ஜெட்… தவெக நிதிநிலை அறிக்கையில்… என்னென்ன ஸ்பெஷல்?…

By Swetha on ஆடி 25, 2026

Spread the love

தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் அல்லாத புதிய ஆட்சியின் முதல் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5 அன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படும் நிலையில், ‘அறம், பொருள், இன்பம்’ எனும் முப்பால் கோட்பாட்டின் அடிப்படையில் 2026-27 நிதிநிலை அறிக்கை அமையவுள்ளது. இந்த பட்ஜெட்டில், முதியோர் உதவித்தொகை உயர்வு, பாரம்பரிய விளையாட்டுகளுக்கான தனி நிதி ஒதுக்கீடு, அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்கித் தரம் உயர்த்துதல் மற்றும் காமராஜர் பெயரிலான சிறப்புப் பள்ளிகள் போன்ற மக்கள் நலன் சார்ந்த முக்கிய அம்சங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெண்கள் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பிற்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பெண்களின் பொருளாதாரத் தன்னிறைவிற்காகச் சிறப்புத் தொழிற்பேட்டைகள் அமைக்கும் திட்டமும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரிக்கத் தனிச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கும் அறிவிப்பும் வெளியாக வாய்ப்புள்ளது. மேலும், வீடற்ற ஏழை மக்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தருதல், மொழிப்போர் தியாகிகளுக்கு அருங்காட்சியகம் அமைத்தல் மற்றும் மனைப் பட்டாக்களை முறைப்படுத்துதல் போன்ற தொலைநோக்குத் திட்டங்களும் பட்ஜெட்டில் இடம்பெறக்கூடும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.

   

மாநிலத்தின் தற்போதைய நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, நிதி விரயத்தைத் தவிர்க்கும் நோக்கில் அத்தியாவசியமான மற்றும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய திட்டங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடுகளைச் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. முந்தைய காலங்களைப் போல ஒதுக்கப்பட்ட நிதி வீணாகாமல், பயன்பாட்டிற்குரிய திட்டங்களுக்கு மட்டுமே செலவிடப்படும் என்பதை உறுதிசெய்து, பொறுப்பான நிதி மேலாண்மையை வெளிப்படுத்த அரசு ஆயத்தமாகி வருகிறது.