தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் விஜய் தற்போது சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இவருடைய தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற்றது. தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் வந்து பல லட்சம் தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். விஜய் ஆனந்த கண்ணீர் சிந்தும் அளவிற்கு தொண்டர்களின் அன்பு அந்த இடத்தில் நிறைந்திருந்தது. வெயிலையும் பொருட்படுத்தாமல் விஜய்க்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் காத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து மாநாட்டுக்கு வந்த விஜய் மூத்த தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு கட்சி கொடியை ஏற்றினார்.

தொடர்ந்து கட்சியின் கோட்பாடுகள் வாசிக்கப்பட்டன. அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து தனது தொண்டர்களுடன் உரையாற்ற தொடங்கிய விஜய் ஒரு குழந்தை மற்றும் பாம்பு கதையை சொல்லி தனது உரையை தொடங்கினார். அப்படி தனது முதல் மாநாட்டில் பேசிய விஜய், கட்சியின் கொள்கை கோட்பாடுகள் மற்றும் செயல் திட்டங்கள் பற்றி பேசினார். பிளவுவாத அரசியல் செய்பவர்கள் தவெக- வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியார் மற்றும் அண்ணா பெயரை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை சுரண்டும் ஒரு குடும்ப சுயநல கூட்டம் நமது அரசியல் எதிரி என்று விஜய் பேசி இருந்தார்.

உலக வரலாறு மற்றும் மேற்கோள்கள் என mp3 ஆடியோ போல கொந்தளிப்பதாக பேசுவது எனது அரசியல் இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக தாக்கினார். அதே சமயம் தான் அரசியலுக்கு வருவதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் பேசியிருந்தார். அதாவது தன்னை இந்த இடத்திற்கு கொண்டுவந்து நிப்பாட்டி உள்ள மக்களுக்காக நான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளேன்.

என்னை வாழவைத்த மக்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இப்படியான நிலையில் தற்போது இணையத்தில் விஜய் குறித்த ஒரு வீடியோ அதிவேகமாக பரவி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் இலங்கை தமிழர்களுக்காக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றோர் கொடுத்த நன்கொடை விபரம் வெளியாகி உள்ளது. அதில் நடிகர் சிம்பு இரண்டு லட்சம், மனோரமா 25 ஆயிரம், தொல் திருமாவளவன் ஐம்பதாயிரம் கொடுத்திருந்த நிலையில் நடிகர் விஜய் வெறும் 500 ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வெளியாகி பேசு பொருளாக மாறி உள்ளது.
https://www.facebook.com/reel/1944069812729495
