தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் விஜயை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால் விஜய் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அதேசமயம் கரூர் சம்பவத்திற்கு பிறகு தனது கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் விஜய் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் அரசியலில் அடுத்து எடுக்கப் போகும் எந்த முடிவாக இருந்தாலும் ஜனநாயகன் படம் வெளியாகும் வரை தெரிவிக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. ஜனநாயகன் படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அந்த டெம்போவை கிரியேட் செய்ய வேண்டும் என விஜய் நினைப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஒருவேளை விஜய் கட்சியை கலைப்பதாக இருந்தாலும் அதை ஜனநாயகன் திரைப்படம் வெளியான பிறகு தான் அறிவிப்பார் என்றும் கூறுகின்றனர்.
